|
Home > Temples of India > vaippu sthalam
கடையக்குடி - (கடையம்)
இறைவர் திருப்பெயர் : வில்வாரணியேசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : நித்தியகல்யாணி.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்.
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - பொருப்பள்ளி வரைவில்லாப் 6-71-3.
தல வரலாறு
- கடையக்குடி என்பது தற்போது 'கடையம்' என்று வழங்குகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- விக்ரம பாண்டியன், மதுரை நாயக்கர் காலங்களில் இக்கோயில் திருப்பணி செய்ததை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
- கல்வெட்டுக்களில் இவ்வூரை "பாண்டிய குலாசினி வளநாட்டு மீசெங்கிளி நாட்டுக் கடையக்குடி" என்று குறிக்கப்பட்டுள்ளது. மேலும் 'விக்ரமபாண்டிய நல்லூர்' என்றும் மற்றொரு கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
- இக்கோயிலில் சித்திரையில் பிரமோற்சவமும், ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து வடதிசையில் 22 கி. மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.
|