கச்சிமயானம் - (காஞ்சிபுரம்)

Kacchimayanam - (Kanchipuram)

 
இறைவர் திருப்பெயர்		: கச்சிமயானேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: சிவகங்கை. 
வழிபட்டோர்			: 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - மைப்படிந்த கண்ணாளுந் (6-97-10). 
kacci mayanam temple

தல வரலாறு

 • பண்டாசுரன் என்பவன் திருமால், பிரமன் மற்றுமுள்ள தேவர்கள் அனைவரின் உடம்புகளிலும் கலந்து அவர்களுடைய வீரியத்தைக் கவர்ந்து அவர்களை வலியிழக்கச் செய்தான். அவனை ஒடுக்க எண்ணிய இறைவன் காஞ்சியில் சோதிப் பிழம்பாகத் தோன்றி, குண்டம் ஒன்று அமைத்து, நெய்யை நிரப்பி, தத்துவங்களைத் தருப்பையாகவும் முக்குணங்களை வேதிகைகளாகவும் கொண்டு அம்மையடன் கூடி வேள்வி செய்தார். அதில் பிரமன் முதலாகவுள்ள எல்லா உயிர்களையும் இட்டார். அனைத்தும் தீயில் ஒடுங்கின. பண்டாசுரன் எதிரே வந்து நிற்க அவனையும் தீயிலிட்டார்.

 • பின்னர் அத்தீயானது லிங்க வடிவமாகி எழுந்து, மயான லிங்கம் என்று பெயரைப் பெற்றது. அதில் இறைவனும் அம்மையும் வீற்றிருந்து அருள் புரிந்து வரலாயினர். அந்நெய்க் குண்டமே இன்று கோயிலுள்ளே இருக்கும் சிவகங்கைத் தீர்த்தமாகும்.

சிறப்புக்கள்

 • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 • கச்சிமயானத்தினைத் தனியே வலம் வரலாம்.

 • இத்தலத்தை வணங்கிய பின்பு நேரே ஸ்ரீ ஏகாம்பரநாதர் தரிசனத்திற்குக் கோயிலுள் செல்லலாம்.

 • திருவேகம்பம் மூவர் பாடியது; கச்சிமயானம் அப்பர் பாடியது.

 • 1. கச்சி மயானம், 2. கடவூர் மயானம், 3. நாலூர் மயானம், 4. காழி மயானம், 5. வீழி மயானம் என ஐந்து மயானங்கள் சொல்லப்படும். இத்தலம் கச்சி மயானம், கடவூர் மயானம் பாடல் பெற்ற தலம், நாலூர் மயானமும் பாடல் பெற்ற தலம், சீகாழியிலிருந்து திருமுல்லைவாசல் செல்லும் சாலையில் 2 கி.மீ.ல் அக்னீஸ்வரர் கோயில் உள்ளது; இதுவே காழி மயானம், திருவீழிமிழலைக்குப் பக்கத்தில் திருமெய்ஞ்ஞானம் என்றொரு ஊருள்ளது; இதுவே வீழி மயானம் ஆகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்திற்கு - சென்னை, திருச்சி மற்றும் முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் நிரம்ப உள்ளன.

< PREV <
கச்சிப்பலதளி
Table of Contents > NEXT >
கஞ்சாறு