|
Home > Temples of India > vaippu sthalam
இறையான்சேரி - (இறகுசேரி)
இறைவர் திருப்பெயர் : மும்முடி நாதர்.
இறைவியார் திருப்பெயர் : சௌந்தர நாயகி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : மூவேந்தர்கள்.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - எச்சில் இளமர் ஏம (6-70-4).
தல வரலாறு
- மக்கள் வழக்கில் இப்பெயர் மருவி, இறகுசேரி, இரவி சேரி என்று வழங்குகிறது.
- மூவேந்தர்களாலும் வழிபடப்பட்ட பழமையான சிவாலயம். எனவேதான் இவ்விறைவனுக்கு மும்முடி நாதர் என்றும்; சமஸ்கிருதத்தில்
திரி மகுடேஸ்வரர் என்றும் பெயர் உண்டாயிற்று.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- பிராகாரத்தில் நடராச சபை உள்ளது.
- சோமாஸ் கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், பைரவர் முதலிய உற்சவ மூர்த்தங்கள் உள்ளன.
குறிப்பு :-
- தஞ்சை மாவட்டதில் இப்பெயருடைய தலம் ஒன்று உள்ளது. இவை இரண்டுமே வைப்புத் தலமாகக் கொள்ளப்படுகின்றன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டைக்கு 1 கி. மீ. தொலைவில் உள்ள ஊர்.
|