|
Home > Temples of India > vaippu sthalam
இராப்பட்டீச்சரம்
இறைவர் திருப்பெயர் : சேஷபுரீசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : அந்தப்பர நாயகி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நல்லூரே நன்றாக (6-25-10).
தல வரலாறு
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
சிறப்புக்கள்
- மண்டபத்தின் இடதுபுறம் தட்சிணாமூர்த்தி பெரிய மூலத்திருமேனி உள்ளது; பக்கத்தில் சீடர்கள் உள்ளனர். கோஷ்டத்தில்
இருக்க வேண்டிய இம்மூர்த்தம் மண்டபத்துள் இருப்பது புதுமை.
- பைரவர் திருமேனி 5 1/2 அடி உயரத் திருமேனி. இவர் மிகவும் வரப்பிரசாதி. இக்கோயிலில் இப்பைரவரே சிறப்பு
மூர்த்தமாக வழிபடப் பெறுகிறார்.
- மூலவர் முன்புள்ள நந்தி, தட்சிணாமூர்த்தியைப் பார்த்தவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பதும் விந்தையான
அமைப்பு.
- மூலவரின் திருமேனியில் பாம்பு வடிவம் உள்ளது. (சேஷபுரீஸ்வரர்.)
- பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ வழிபாடு நடைபெறுகிறது. வாழையிலையில் தயிர் சாதமும் வடையும்
நிவேதிக்கப்படுகிறது.
- கோயிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தம் மலட்டுத் தன்மையைப் போக்கும் தன்மையதாகச் சொல்லப்படுகிறது.
- கோயில் கற்றளி.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
'மணக்கால்' என்னும் ஊருக்கு மிக அருகில் உள்ளது. வழி விசாரித்துச் செல்ல வேண்டும். கும்பகோணம் - திருவாரூர் பேருந்துச் சாலையில் மணக்கால் உள்ளது.
|