|
Home > Temples of India > vaippu sthalam
இடைக்குளம் - (மருத்துவக்குடி)
இறைவர் திருப்பெயர் : ஐராவதேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : அபிராமிநாயகி.
தல மரம் :
தீர்த்தம் : சந்திர புஷ்கரணி.
வழிபட்டோர் : ஐராவதம்.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நள்ளாறும் பழையாறுங் (6-71-10).
தல வரலாறு
- மக்கள் வழக்கில் 'மருத்துவக்குடி' என்று வழங்குகிறது.
- ஐராவதம் வழிபட்ட தலம்; ஐராவதம் வழிபட்டு பேறு பெற்றதனால் இறைவனுக்கு ஐராவதேசுவரர் என்று பெயர்.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- பெரிய சிவாலயம்; பழைமையானது, கற்றளி.
- நந்தி - நீர் கட்டும் அகழி அமைப்பில் உள்ளது.
- பிராகாரத்தில் - வரிசையாக நான்கு சிவலிங்க மூர்த்தங்கள் உள்ளன.
- மூலவர் - சதுர ஆவுடையார்; சற்று கூரான பாணம்.
- கோயில் கல்வெட்டில் இறைவன் பெயர் "உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு....... திருஇடைக்குளமுடையார்"
என்றுள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறையிலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் ஆடுதுறை வந்து - அங்கிருந்து ரயில்வே ரோடில் வந்து மருத்துவக்குடியை
அடையலாம். 2 கி.மீ. தொலைவு.
|