|
Home > Temples of India > vaippu sthalam
கோவந்த புத்தூர் (கோவிந்தபுத்தூர்)
இறைவர் திருப்பெயர் : கங்கா ஜடேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : மங்கள நாயகி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : காமதேனு, இந்திரன், அருச்சுனன் ஆகியோர்
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - கொல்லி டக்கரைக் (5-71-3).
தல வரலாறு
- இன்று கோவிந்த புத்தூர் என்று வழங்குகிறது.
- காமதேனு, இந்திரன், அருச்சுனன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
சிறப்புக்கள்
- இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- கோவிந்த புத்தூர் - கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள தலம்; தென்கரையில் விசயமங்கை என்னும் சிவாலயம் உள்ளது.
- பழமையான சிவாலயம்; உள்வாயிலின் மேற்புறம் ரிஷபாரூடர் தரிசனம் - சுதையில் உள்ளது.
- பசு பால் சொரிந்து வழிபடும் சிற்பம், இந்திரன், காமதேனு, அருச்சுனன் ஆகியோர் வழிபடும் சுதை சிற்பங்கள் உள்ளன.
- கோயில் விமானம் உத்தமச் சோழப் பல்லவனின் காலத்திய வேலைப்பாடமைந்தது.
- சுவாமி திருமேனியில் அருச்சுனன் அம்புபட்ட தழும்பு உள்ளது.
குறிப்பு :-
- ஊரின் பெயர் கோவந்தபுத்தூர் - கோயிலின் பெயர் விசயமங்கை. இது பாடல் பெற்ற தலம்; வைப்புத் தலமன்று என்பதொரு கருத்துள்ளது.
- வழக்கில் கொள்ளிடத் தென்கரைத் தலமான விசயமங்கையே தொன்று தொட்டு பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
(1) ஜயங்கொண்டத்திலிருந்து 'மதனத்தூர்' சாலையில் வந்து - தா.பழூர், காரைக்குறிச்சி, ஸ்ரீ புரந்தரன் (திருபுரந்தன்) வழியாகக் கோவிந்தபுத்தூரை
அடையலாம். (2) கங்கைகொண்ட சோழபுரம் கூட்ரோடு - அங்கிருந்து ஜயங்கொண்டம் வந்து மேலே சொல்லியவாறு
கோவிந்தபுத்தூரை அடையலாம்.
See Also:
1. விசயமங்கை
|