|
Home > Temples of India > vaippu sthalam
எழுமூர் - (எழும்பூர் / சென்னை)
இறைவர் திருப்பெயர் : அர்த்தநாரீசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - கொடுங்கோளூர் அஞ்சைக் (6-70-5).
தல வரலாறு
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
சிறப்புக்கள்
- சென்னையில் எழுமூர் என்பது ஒரு பகுதி. இன்று எக்மோர் (Egmore) என்றும் எழும்பூர் என்றும் வழங்குகிறது.
- தொண்டை மண்டலப் பட்டயத்தில் குறிக்கப்பட்டுள்ள 24 கோட்டங்களுள் 1. புழல், 2. புலியூர், 3. மணவில் கோட்டங்கள் அடங்கிய
பகுதியே தற்போதுள்ள சென்னையாகும்.
- இதில் புழல் கோட்டத்தில் இருந்த நாடுகளுள் எழுமூரும் ஒன்று; இதைச் சேர்ந்த சிற்றூர்கள் சேற்றுப்பட்டு (சேத்பட்), புரசைவாக்கம், வேப்பேரி,
கீழ்ப்பாக்கம் முதலியன.
- எழுமூரில் உள்ள 'ழ' கரத்தை உச்சரிக்க இயலாத ஆங்கிலேயர் இதை எக்மோர் - EGMORE என்று உச்சரித்தனர்; எழுமூர் நாளடைவில்
எழும்பூர் ஆயிற்று.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சென்னையில் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தாசப்பிரகாஷ் ஓட்டலுக்கு பக்கத்தில் செல்லும் ஆராவமுதன் தோட்டத் தெருவில் சென்று வலப்புறமாகத் திரும்பினால் கோயில் உள்ளது.
|