ஏமப்பேறூர் - (திருநெய்ப்பேறு)

இறைவர் திருப்பெயர்		: வன்மீகநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: உமாபரமேஸ்வரி.
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - இடைமரு தீங்கோ (6-70-3).

தல வரலாறு

  • திரு நெய்ப் பேறு'' என்று தற்போது வழங்குகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • நமிநந்தியடிகள் நாயனார் அவதரித்த தலம்; சாலையோரத்தில் "அடியார் கோயில்" என்ற நாயனாரில் கோயில் உள்ளது. சிறிய கோயில் நாயனாரில் மூலத் திருமேனி இக்கோயிலில் உள்ளது. உற்சவத் திருமேனி திருவாரூர்க் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் நாயனாரின் குருபூசை நடைபெறுகிறது.
  • மூலவர் தரிசனம் - நீண்டுயர்ந்த பாணம்.
  • கோயிலுள் நுழைந்ததும் இடப்பால் நமிநந்தியடிகள் (மூலத்திருமேனி) எண்ணெய்க் குடுவையுடன் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - திருத்துறைப்பூண்டிச் சாலையில் 8 கி.மீல் திருநெய்ப்பேறு உள்ளது. "அடியார் கோயிலு"க்கு எதிர்ப்புறத்தில் உள்ள சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.

< PREV <
ஏமநல்லூர் (திருலோக்கி)
Table of Contents > NEXT >
ஏறனூர் (ஏற்றமனூர்)