|
Home > Temples of India > vaippu sthalam
ஏமநல்லூர் - (திருலோக்கி)
இறைவர் திருப்பெயர் : சுந்தரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : அகிலாண்டேஸ்வரி.
தல மரம் : சரக்கொன்றை.
தீர்த்தம் : லட்சுமி தீர்த்தம்.
வழிபட்டோர் : பிருகு முனிவர், தேவகுரு முதலியோர்
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - எச்சில் இளமர் ஏம (6-70-4).
தல வரலாறு
- மக்கள் வழக்கில் 'திருலோக்கி' என்று வழங்குகிறது.
- முதலாம் ராசராசனின் மனைவியருள் ஒருத்தி - திரைலோக்ய மாதேவி; சுவாமி - சுந்தரேஸ்வரர்; இவையிரண்டும் சேர்ந்து "திரைலோக்ய
சுந்தரம்" என்று பெயர் வழங்கியுள்ளது போலும்.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- இத்தலம் திருவிசைப்பா தலமும் ஆகும்.
- இத்தலத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன. அவற்றுள் சுந்தரேஸ்வரர் கோயிலே திருவிசைப்பா பாடல் பெற்றதாகும்.
- லிங்கம் ஒன்றுள்ளது - இஃது ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
புதுமையாகவும் அற்புதமாகவும் உள்ள இது போன்று காண்பது அரிது.
- (இங்குள்ள கோட்டூர் என்பது திருமறைத்தலமன்று. இது வேறு.) முதலாம் இராசராசன் காலத்தில் கோட்டூரும், திரைலோக்கி சுந்தரமும்
ஒன்றாக இருந்திருக்க வேண்டும். தற்போது 'திருலோக்கி' தனிக் கிராமமாகவுள்ளது.
கோட்டூர் இன்று "துகிலி" என்று வழங்குகிறது.
- இவ்வூர் 'மண்ணிநாட்டு ஏமநல்லூராகிய திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம்' எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறை சாலையில் 3 கி.மீ. சென்று ஊரையடையலாம்.
|