தேவீச்சுரம் - (வடிவீஸ்வரம்)

Theveechuram - (Vadiveeswaram)

 
இறைவர் திருப்பெயர்		: சுந்தரேஸ்வரர், தேவீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: வடிவழக நாயகி, அழகேஸ்வரி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: அம்பிகை (தேவி), இந்திரன். 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - செழுநீர்ப் புனற்கெடில (6-7-5). 

தல வரலாறு

  • இன்று "வடிவீஸ்வரம்" என்று வழங்குகிறது.

  • அம்பிகை (தேவி) வழிபட்ட தலமாதலின் இத்தலம் 'தேவீச்சுரம்' என்று பெயர் பெற்றது.

  • இந்திரன் மாலை வேளையில் சுவாமியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறாதலின், கோயிலில் மாலைக் கால வழிபாடு விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • பழைய நூலில் சுவாமியின் பெயர் 'தேவீச்வரர்' என்று உள்ளதாக தெரிகிறது.

  • கொடி மரத்தின் மேற்புறத்தில் ராசிகளும் நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.

  • கேரள கலைப் பாணியில் முகப்பு மண்டபம் ஓடு வேயப்பட்டுள்ளது.

  • இங்குள்ள கல்வெட்டுக்களில் கோயிலுக்கு மானியங்களை அளித்த செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரியிலிருந்து - நாகர்கோயிலுக்கு பேருந்து வசதிகள் நிரம்ப உள்ளன. நாகர்கோயில் திருவள்ளுர் பேருந்து நிலைத்திற்கு எதிரில், வலப்புறம் உள்ள சிறிய தெருவில் கோயில் உள்ளது.

< PREV <
தென்கோடி
Table of Contents > NEXT >
தேனூர்