|
Home > Temples of India > vaippu sthalam
ஆழியூர்
இறைவர் திருப்பெயர் : கங்காளநாதர்.
இறைவியார் திருப்பெயர் : கற்பகவல்லி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : முருகன், பிடாரி.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - வீழி மிழலைவெண் (6-70-7); சுந்தரர் - ஈழ நாட்டுமா (7-12-7).
தல வரலாறு
- ஆழி என்பதற்கு கடல் என்று பொருள்.
- சூரசம்ஹார தோஷ நிவிர்த்திக்காக முருகன் ஐந்து லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், அவற்றுள் ஒன்று இங்கு ஸ்தாபிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
- பிடாரி வழிபட்ட தலம்.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர், சுந்தரர் ஆகியோர்களின் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- 'நெற்றிக் கண் அம்மன்' என்னும் பிடாரி அம்மனுக்குத் தனிச் சந்நிதியுள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூரிலிருந்து கீவளூர் (கீழ் வேளூர்) வழியாக நாகப்பட்டடினம் செல்லும் சாலையில் - 'கீழ்வேளூருக்கும்' 'சிக்கலுக்கும்' இடையில் ஆழியூர் உள்ளது. சாலையோரத்தில் உள்ள ஊர்.
|