|
Home > Temples of India > vaippu sthalam
அயனீச்சரம் - (பிரமதேசம்)
இறைவர் திருப்பெயர் : கைலாசநாதர்.
இறைவியார் திருப்பெயர் : பெரியநாயகி.
தல மரம் : இலந்தை.
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நாடகமா டிடநந்தி (6-71-8).
தல வரலாறு
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
சிறப்புக்கள்
- ஊருக்கு அண்மையில் தாமிரபணி பாய்கிறது.
- பெரிய சிவாலயம்; சிவப்புக் கல் கட்டிடம். கோயில் முழுவதும் சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கிறது.
- கோயிலுக்கு எதிரில் நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தக் குளம் உள்ளது.
- மிகப் பெரிய ராஜ கோபுரம், விசாலமான முன் மண்டபம், மேற்புறத்தில் சிலவிடங்களில் அழகிய கொடுங்கைகள் உள்ளன. சிறந்த கல் வேலைப்பாடமைந்த பழைமையான கோயில்.
- மண்டபத்தின் இடப்பால் சம்பந்தர், அப்பர், சுந்தரர் சந்நிதியுள்ளது. பெரிய நந்தி உள்ளார்.
- வெளிப் பிராகாரத்தில் தலமரம் - இலந்தை உள்ளது.
- நீளமான முன்மண்டபத்துடன் அமைந்துள்ள சொக்கநாதர் மீனாட்சி சந்நிதியிலுள்ள கல்தூண் சிற்பங்கள் அழகான வேலைப்பாடுடையன.
- திருவாதிரை மண்டபத்தில் கல்பீடத்தில் நடராச சபை அமைந்துள்ளது.
- மூலவர் - சற்று உயரமான பாணத்துடன் காட்சித் தருகிறார்.
- (தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் உள்ள ஊருடையப்பர் கோயிலில் உள்ள கல்வெட்டில் தலப்பெயர் 'அஜனீஸ்வரம்' என்றுள்ளதால், இதை 'அயனீஸ்வரம்' என்பாருமுளர்.)
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
அம்பாசமுத்திரம் - முக்கூடல் பாதையில், அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதியுள்ளது. அம்பாசமுத்திரத்திலிருந்து சென்று வர ஆட்டோ, டாக்சி வசதியுள்ளது.
|