|
Home > Temples of India > vaippu sthalam
அரிச்சந்திரம் / பாற்குளம்
இறைவர் திருப்பெயர் : சந்திரமௌலீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : சௌந்தரவல்லி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - கொடிமாட நீடெருவு (6-13-1), அரிச்சந் திரத்துள்ளார் (6-51-10).
தல வரலாறு
- சோழன் மாளிகை என்னும் ஊருக்குப் பக்கத்தில் இருப்பதால், இது 'சோழன் மாளிகை அரிச்சந்திரபுரம்' என்றழைக்கப்படுகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- இக்கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் (சாலையின் மறுபுறத்தில்) சற்றுத் தொலைவில் உள்பகுதியில் ஒரு குளம் உள்ளது. அது "பாற்குளம்" எனப்படுகிறது. அங்குக் கோயில் ஏதுமில்லை. பாற்குளமும் ஒரு வைப்புத் தலமாகச் சொல்லப்படுகிறது. நாவுக்கரசு பெருமான் இப்பாற்குளத்தை "பழையாறும் பாற்குளமு" என்று சிறப்பிக்கின்றார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
(1) கும்பகோணத்திலிருந்து பட்டீச்சரம் சாலையில் வந்தால், சோழன் மாளிகை என்னும் ஊருக்கு முன்னால் அரிச்சந்திரபுரம் உள்ளது. அரிச்சந்திரபுரத்துக்கு முன்னாலேயே கோயிலும் குளமும் உள்ளது. (2) பட்டீச்சரம் கோயிலுக்கு முன்பு வலப்புறமாகச் செல்லும் சாலையில் சென்று கடைவீதியில் விசாரித்துச் செல்லலாம்.
|