|
Home > Temples of India > vaippu sthalam
ஆறைமேற்றளி (திருமேற்றளி)
இறைவர் திருப்பெயர் : கயிலாய நாதர்.
இறைவியார் திருப்பெயர் : சபள நாயகி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - அங்கம் ஓதியோர் (7-35-1).
தல வரலாறு
- திருமேற்றளி என்று வழங்குகிறது. மக்கள் பேச்சு வழக்கில் 'திருமேற்றளிகை' என்றும் சொல்கின்றனர்.
- காமதேனுவின் புதல்வியருள் 'சபளி' என்பவள் பூசித்தது. (ஏனையவை 'பட்டி' பூசித்தது - பட்டீச்சரம்; விமலி பூசித்தது - பழையாறை வடதளி; நந்தினி பூசித்தது - முழையூர் ஆகும்.)
சிறப்புக்கள்
- இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- ஆனி மாதம் முதல் நாள் பட்டீச்சரப் பெருமான் பல்லக்கு உற்சவத்தில் இவ்வூருக்கு வந்து செல்வார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - தாராசுரம் - பட்டீச்சரம் வழியாக பாபநாசம், தஞ்சாவூர் செல்லும் சாலையில், சாலையோரத்தில் கோயில் உள்ளது.
|