|
Home > Temples of India > vaippu sthalam
ஆன்பட்டிப்பேரூர் (பேரூர்)
இறைவர் திருப்பெயர் : பட்டிப்பெருமான், பட்டீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : பச்சைநாயகி, மரகதவல்லி.
தல மரம் :
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், காஞ்சிமா நதி.
வழிபட்டோர் : காமதேனு, பட்டி.
வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - ஆரூர் தில்லையம் (2-039-1); அப்பர் - சிந்தும் புனற்கெடில (6-07-10),
அஞ்சைக் களத்துள்ளார் (6-51-8), ஆரூர்மூ லத்தானம் (6-70-2);
சுந்தரர் - ஆரூர் அத்தா ஐயாற் (7-47-4), பாரூரும் அரவல்குல் (7-90-10)
தல வரலாறு
- காமதேனுவும், அவள் மகள் 'பட்டி' என்பவளாலும் வழிபடப்பட்ட பதி.
- பேரூர் நடராசப் பெருமானைத் தரிசித்த சுந்தரர், தில்லை சென்று வணங்கியபோது, அப்பெருமான் பேரூர்ப் பெருமானாகவே காட்சி தந்தார் என்பது வரலாறு.
- நடராசர் அம்பலத்தில் எழுந்தருளியுள்ள அம்பலவாணப் பெருமான், கோமுனிக்கும் 'பட்டி'க்கும் ஆனந்த தாண்டவ தரிசனம் அருளிய பெருமானாவார்.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- மணிவாசகரின் திருக்கோவையாரிலும் இத்தலம் போற்றப்படுகிறது.
- அருணகிரிநாதர் இங்குள்ள முருகனைப் போற்றித் திருப்புகழ் அருளியுள்ளார்.
- நொய்யலாற்றின் கரையில் உள்ள தலம்.
- இத்தலத்திற்குக் காஞ்சிவாய்ப் பேர், மேலச்சிதம்பரம், இனாம்பேரூர், அரசம்பலம் என பெயர்கள் இருந்ததாகத் தெரிகிறது.
- தலவரலாறு தொடர்புடையதால் - இத்தலம் மேலைச் சிதம்பரம் என்று போற்றப்படும் பெருமை வாய்ந்தது.
- இங்குள்ள நடராசர் அம்பலம் - நடராச சபை, வேறெங்கும் காண முடியாத சிற்பக்கலை நுட்பங்கள் வாய்ந்தது. இம்மண்டபம் முழுவதுமே - ஒவ்வொரு பகுதியும் சிற்பக் கலையழகுடன் மிளிர்கின்றது. இச்சபை நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு வரலாறு கூறுகிறது.
- கோயிலுக்கு எதிரே 16 வளைவுகளைக் கொண்ட திருக்குளம் மற்றும் இறவாப்பனையும், பிறவாப்புளியும் உள்ளது.
- பேரூர் புராணத்தை திருவாவடுதுறை ஆதீனம் கவிராக்ஷ கச்சியப்பமுனிவர் எழுதியுள்ளார்.
- பேரூர்த் தலத்திற்குறிய சிறப்புக்களாக எழும்பு கல்லாதல், இறவாப்பனை, பிறவாப்புளி, திருநீற்றுமேடு, செம்பு பொன்னாதல், இறக்கும் உயிர்கள் வலச் செவியை மேல்வைத்து இறத்தல் போன்றச் சிறப்புச் செய்திகள் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
- கரிகாற்சோழன் இத்தலத் திருக்கோயிலைக் கட்டினான் என்று சோழர்களின் பூர்வபட்டயம் கூறுகிறது.
- இத்தலம் "பேரூர் நாட்டுக் கோவன்புத்தூர்" என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கோயம்புத்தூருக்குப் பக்கத்தில் உள்ளது. அடிக்கடி கோவையிலிருந்து பேருந்து செல்கிறது.
|