|
Home > Temples of India > vaippu sthalam
அன்னியூர் - (அன்னூர்)
இறைவர் திருப்பெயர் : மன்னீசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : அருந்தவச்செல்வி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - .........
தல வரலாறு
- அன்னி என்ற வேடன் வள்ளி கிழங்கு வெட்டும்போது, மண்ணுக்குள் மறைந்திருந்த சிவலிங்கத்தை வெட்டி விட்டான். அவனது செயலை மன்னித்தாலும், 'மன்' நிலை பெறுதல் என்ற பொருளில் என்றும் உள்ள பெருமானாகவும் இருப்பதால், இறைவன் மன்னீசுவரர் என்று திருநாமம் பெற்று விளங்குகிறார்.
சிறப்புக்கள்
- இத்தலம் சம்பந்தர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- இக்கோயில் தி. மு. 2000 வருடத்திற்கு முற்பட்ட கோயிலாகும்.
- மூலவர் சிவலிங்கத் திருமேனி; மிகப் பெரிய மூர்த்தம்.
- அன்னியூர்த் தலபுராணம் சிரவணபுரம் தவத்திரு கந்தசாமி சுவாமிகளால் இயற்றப்பட்டது.
- இக்கோயிலி 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.
- திருமுருகன் பூண்டி கல்வெட்டில் இவ்வூரை "மேற்றலைத் தஞ்சாவூரான மன்னியூர்" என்று குறிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கோயம்புத்தூர் மாவட்டம், அவிநாசியிலிருந்து 19 கி. மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
|