அணிஅண்ணாமலை - (அடிஅண்ணாமலை)

இறைவர் திருப்பெயர்		: ஆதி அருணாசலேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: ஆதி அபீதகுஜாம்பாள்.
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - 1. ஓதிமா மலர்கள்... (4-63-...) 

தல வரலாறு

  • திருவண்ணாமலை கிரி வலம் வரும்போது இக்கோயில் உள்ளது; மக்கள் அடி அண்ணாமலை கோயில் என்றழைக்கின்றனர்.

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • இத்தலத்திற்கு அப்பர் பெருமான் அருளியுள்ள நேரிசைப் பதிகம் திருவண்ணமாலை எனப் பெயரிட்டு நான்காம் திருமுறையுள் உள்ளது.

சிறப்புக்கள்

  • இக்கோயில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் தேவஸ்தானத்துடன் இணைந்தது; கோயில் பெயர்ப் பலகையில் ஆதி அருணாசலேஸ்வரர், ஆதி அபீதகுஜாம்பாள் கோயில் என்றெழுதப்பட்டுள்ளது.

  • வாகன மண்டபத்தை அடுத்தாற் போல் காரைக்காலம்மையார், விநாயகர், சுந்தரர், அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர், திலகவதி, பாலகணபதி, மூன்று சிவலிங்கங்கள் உள்ளிட்ட பல மூர்த்தங்கள் உள்ளன.

  • அம்பாள் சந்நிதியை தனியே வலம் வரலாம்; தனி சந்நிதி.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னை, திருச்சி மற்றும் பல ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. பெங்களூரில்ருந்தும் நேரடி பேருந்து வசதி உள்ளது.

< PREV <
அண்ணல்வாயில்
Table of Contents > NEXT >
அத்தீச்சுரம்