அகத்தீச்சுரம் - (அகத்தீஸ்வரம்)

இறைவர் திருப்பெயர்		: அகத்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: அறம்வளர்த்த நாயகி, அமுதவல்லி.
தல மரம்			: அகத்தி.
தீர்த்தம்				: அகத்திய தீர்த்தம். 
வழிபட்டோர்			: அகத்தியர், லோபாமுத்திரை (அகத்தியர் மனைவி).
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நாடகமா டிடநந்தி (6-71-8)

தல வரலாறு

  • அகத்தியர் வழிபட்டத் தலமாதலின், இஃது 'அகத்தீச்சுரம்' எனப்பட்டது.

  • கோயில் உள்ள இடம் "வடுகன் பற்று" ஆகும்.

  • அகத்தியர், தம்முடைய மனைவி லோபாமுத்திரையுடன் வழிபட்ட தலம்.

  • இக்கோயில் பாண்டிய மன்னன் ஜயச்சந்திர ஸ்ரீ வல்லபன் என்பவனால் கட்டப்பட்டது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • கோயில் கருங்கல் திருப்பணி.

  • அழகிய மணவாளப் பெருமாள் சந்நிதி தனியாகவுள்ளது.

  • சோழர்கள் காலத்தில் இக்கோயில் சிறப்புற்று விளங்கியதை இங்குள்ள கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது.

குறிப்பு :-

  • அகத்தீச்சுரம் என்ற பெயரில் பல தலங்கள் உள்ளன.

  • திண்டிவனம் - பாண்டிச்சேரி சாலையில் உள்ள கிளியனூரில் உள்ள சிவாலயம் அகத்தீஸ்வரம் என்ற பெயருடையதாகவுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கன்னியாகுமரியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், நாகர்கோயிலிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. நாகர் கோயில் - கன்னியாகுரி சாலையில் 'கொட்டாரம்' வந்து - அங்கிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள "வடுகன்பற்று" அடைந்து அங்கிருந்து அருகாமையிலுள்ள கோயிலையடையலாம்.

< PREV <
அக்கீச்சுரம்
Table of Contents > NEXT >
அண்ணல்வாயில்