ஆதிரையான்பட்டினம்
(அதிராம்பட்டினம்)

இறைவர் திருப்பெயர்		: அபயவரதீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: சுந்தரி.
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - திங்களூர் திருவா (7-31-6)

தல வரலாறு

  • தற்போது அதிராம்பட்டினம் என்று வழங்குகிறது.

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • இவ்வூர் முன்பொறு காலத்தில் 'அதிவீர இராமபட்டினம்', திருஆதிரையான் பட்டினம்' என்றெல்லாம் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

சிறப்புக்கள்

  • முகப்பில் மிகப் பெரிய முன் மண்டபம் உள்ளது.

  • ஆதிரையான் - இறைவன். இப்பெயரையொட்டி இக்கோயிலில் திருவாதிரை நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

  • பங்குனி உத்திரச் சிறப்பு ஒரு நாள் விழாவாக நடத்தப்பெறுகிறது.

  • கல்வெட்டுக்கள் இவ்வூரை வீரசோழபட்டினம் என்று குறிக்கின்றது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
பட்டுக்கோட்டையிலிருந்து தென்கிழக்கே 13 கி.மீ தொலைவில் அதிராம்பட்டினம் உள்ளது. அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து நேர் எதிர்புறத்தில் செல்லும் "சேது ரோடில்" சிறிது தூரம் சென்றால் சாலையோரத்தில் வலப்புறம் "அபய வரதேஸ்வர சுவாமி" என்ற வளைவு உள்ளது.

< PREV <
திருமலை
Table of Contents > NEXT >
திருவாமூர்