|
Home > Temples of India >
vaippu sthalam
மணமேல்குடி
குலச்சிறை நாயனாரின் அவதாரத் தலம்
Birth place of kulachchiRai nAyanAr
இறைவர் திருப்பெயர் : ஜெகதீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஜெகத்ரட்சகி.
- இது குலச்சிறை நாயனார் அவதரித்த திருத்தலம்.
குலச்சிறை நாயனாரின் திருவுருவச் சிலை, திருஞானசம்பந்தர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசியார் ஆகியோரது திருவுருவச் சிலைகளுடன் தனிச் சந்நிதியில் -
அம்பாள் சந்நிதிக்கு எதிரில் கொடிக் கம்பத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இவர் மதுரையம்பதி எனும் திருஆலவாயில் நின்றசீர் நெடுமாற நாயனார் அரசாட்யில் அமைச்சராக இருந்தவர். மதுரையில் மங்கையர்க்கரசியாருடன் திருஞானசம்பந்தர்
துணைகொண்டு சமணத்தை அகற்றி சைவத்தை நிலைநாட்டியவர்.
அவதாரத் தலம் : மணமேற்குடி.
வழிபாடு : குரு வழிபாடு.
முத்தித் தலம் : மணமேல்குடி அல்லது மதுரையாக இருக்கலாம்.
குருபூசை நாள் : ஆவணி - அனுஷம்
அமைவிடம்
அ/மி. ஜெகதீசுவரர் திருக்கோயில்,
மணமேல்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் - 614 620.
தொடர்பு : 04371 - 250535 / +91-9788180300 / +91-9865534240.
மாநிலம் : தமிழ் நாடு
மணமேல்குடி எனும் இத்தலம் அறந்தாங்கியிலிருந்து 35-கி.மீ. தொலைவு; ஆவுடையார்கோயிலிலிருந்து 25-கி.மீ. தொலைவாகும். புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோயில்,
பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், நாகூர், வேதாரண்யம், இராமநாதபுரம், இராமேஸ்வரம் முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது. இது சென்னை - பாண்டிச்சேரி -
காரைக்கால் - இராமநாதபுரம், இராமேஸ்வரம் வழித்தடத்தில் அமைந்த கிழக்குக் கடற்கரைச்சாலை வழியாகும்.
குலச்சிறை நாயனார் புராணம் (மூலம்)
|