திருவியலூர் (திருவிசநல்லூர் / திருவிசலூர்)

இறைவர் திருப்பெயர்		: யோகானந்தீஸ்வரர், புராதனேஸ்வரர், வில்வாரண்யேசுவரர்.
இறைவியார் திருப்பெயர்		: சாந்தநாயகி, சௌந்தரநாயகி.
தல மரம்			: 
தீர்த்தம்				: சடாயுதீர்த்தம்.
வழிபட்டோர்			: சடாயு 
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - குரவங்கமழ் நறுமென்குழல்
Tiruviyalur temple

தல வரலாறு

  • மக்கள் திருவிசலூர், திருவிசநல்லூர் என்று சொல்கின்றனர். திருவிசலூர் என்ற பெயரில் தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்களிருப்பதால் இப்பதி "பண்டாரவாடை திருவிசலூர் " திருவிசநல்லூர் என்று வழங்கப்படுகிறது.

  • சடாயு வழிபட்டு பேறு பெற்றத் தலம்.

சிறப்புகள்

  • சைவசித்தாந்த சாத்திர நூல்களுள் ஒன்றாகிய 'திருவுந்தியார் ' பாடிய 'திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் ' அவதரித்த தலம்.

  • சோழர் காலக் கல்வெட்டில் இத்தலம் "வடகரை ராஜேந்திர சிம்ம சோழவளநாட்டு, மண்ணிநாட்டு பிரமதேயமான வேப்பத்தூர் சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஊர் " என்றும், இறைவன் பெயர் "திருவிசலூர் தேவ பட்டாகரர், சிவயோகநாதர் " எனவும் குறிக்கப்படுகிறது.

  • இரண்டாம் பராந்தகன் காலக் கல்வெட்டில், விளக்கெரிக்க நிலமும் ஆடுகளும் அளித்த செய்தியையும், அபிஷேகத்திற்கு நிலம் விட்ட செய்தியையும், காவிரியிலிருந்து அபிஷேகத்திற்கு நீர் கொண்டுவர ஆட்களை நியமித்து ஊதியம் வழங்க நிலங்களை விட்ட செய்தியையும் தெரிவிக்கின்றன.

  • இராசேந்திரன் காலக் கல்வெட்டில், அரசன் கோயிலுக்கு நிலமளித்த செய்தியையும், அவன் மனைவியான அரசி, சுவாமிக்கு தங்க நகைகளும், அபிஷேகத்திற்கு வெள்ளிக் கவசமும் அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவிடைமருதூர் - வேப்பத்தூர் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்தும் செல்லலாம்; நகரப் பேருந்துகள் உள்ளன.

தொடர்பு :

  • 0435 - 2000679, 09444747142.

< PREV <
காவிரி வடகரை 42வது
தலம் திருந்துதேவன்குடி
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 44வது
தலம் கொட்டையூர்