|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருவிளநகர் கோயில் தலவரலாறு
Sthala puranam of Thiruvilanagar Temple
இறைவர் திருப்பெயர் : துறைகாட்டும் வள்ளல், உச்சிவனேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : வேயுறுதோளி
தல மரம் :
தீர்த்தம் : மெய்ஞ்ஞான தீர்த்தம்
வழிபட்டோர் : கபித்தன் என்னும் அரசன்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்

தல வரலாறு
அருள்வித்தகர் என்னும் அந்தணர், ஈசனுக்குப் பூக்கூடையை எடுத்துக்கொண்டு காவிரியாற்றில் வரும்போது, வெள்ளம் அவரை அடித்துச்செல்ல, இறைவன் துறை காட்டிக் கரையேற்றுவித்து, அருள்புரிந்தார். எனவே இத்தல இறைவன், இப்பெயர் பெற்றார்.இது இத் தலத் தேவாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கபித்தன் என்னும் அரசன் பூஜித்து பிரமகத்தி தோஷம் நீங்கப்பெற்றான்.
சிறப்புகள்
- இக் கோவில் தருமை ஆதினக் கோவிலாகும்.
- இங்கு, மூன்று கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இக்கோவில் மயிலாடுதுறைக்குக் கிழக்கே 6-கி. மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து செம்பொனார்கோவில் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.
|