|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருவிடைவாய்
இறைவர் திருப்பெயர் : விடைவாயப்பர், புண்ணியகோட்டீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : உமையம்மை, அபிராமி.
தல மரம் :
தீர்த்தம் : புண்ணியகோடி தீர்த்தம்.
வழிபட்டோர் :
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - மறியார் கரத்தெந்தையம்.
தல வரலாறு
- சோழநாட்டு காவிரி தென்கரையில் இது 114வது தலமாகும்.
- இத்தலம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டத் திருமுறைத் தலமாகும். கி. பி. 1917ல் இத்தலம் கண்டெடுக்கப்பட்டது. மேடு ஒன்றினை வெட்டியெடுக்கும்போது உள்ளே கோயில் இருந்ததாகவும், தோண்டிப் பார்க்கையில் கோயிலுக்குள் அத்தலத்தைப் பற்றிய திருஞானசம்பந்தர் தேவாரம் கல்வெட்டில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
சிறப்புக்கள்
- ஐயடிகள் காடவர்கோன் தம்முடைய க்ஷேத்திரக் கோவையில் "தென் இடைவாய்" என்று குறிப்பிட்டுப்பாடுகிறார்.
- கோயிலில் தலப்பதிக கல்வெட்டு உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சாவூர் மாவட்டம், கொரடாச்சேரி - கூத்தாநல்லூர் பாதையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் பிரியும் "திருவிடைவாயில்" என்னும் வழிகாட்டிப் பாதையில் 2 கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். தற்போது திருவிடைவாயில் என்று வழங்குகிறது.
|