வேட்டக்குடி

இறைவர் திருப்பெயர்		: சுந்தரேஸ்வரர், திருமேனியழகர்.
இறைவியார் திருப்பெயர்		: சௌந்தரநாயகி, சாந்தநாயகி.
தல மரம்			: புன்னை (தற்போது இல்லை)
தீர்த்தம்				: தேவதீர்த்தம்.
வழிபட்டோர்			: அருச்சுனன்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - வண்டிரைக்கும் மலர்க்கொன்றை.
Vettakudi temple

தல வரலாறு

  • கோயில் அமைந்துள்ள பகுதி 'கோயில் மேடு ' என்றழைக்கப்படுகிறது.

  • அருச்சுனன் வந்து தவஞ்செய்ய, இறைவன் வேட வடிவத்தில் வெளிப்பட்டு அருள் செய்ததாகப் புராண வரலாறு சொல்கிறது.

  • இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் வந்து அவதரித்ததாகப் புராண வரலாறு கூறுகிறது.

சிறப்புக்கள்

  • வேடனாக வந்த தலமூர்த்தி, வேடுவச்சியாக வந்த அம்பாள் ஆகிய (வேடரூபர், வேடநாயகி) திருமேனிகள் சிறப்பானவை; வேடரூபர், கையில் வில்லேந்திக் கம்பீரமாக காட்சித் தருகிறார்.

  • ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருமேனியழகரான சுவாம வேடமூர்த்தியாகக் காட்சி தந்து கடல் நீராடுகிறார்; இது "கடலாடுவிழா " என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

  • இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் வந்து அவதரித்ததாகப் புராண வரலாறு கூறுவதால் இக்'கடலாடு விழா 'வை கடலோர ஊர்களில் வாழும் மீனவர்கள் ஏற்று நடத்துகிறார்கள்.

  • மாசிமகத்தில் இக்கோயில் தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காரைக்காலுக்குப் பக்கத்தில் உள்ளது. தரங்கம்பாடி - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில், புதுவை மாநில எல்லையில் நுழைந்து 'பூவம் 'கிராமத்தைத் தாண்டி, 'வரிச்சுக்குடி' என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து திருவேட்டக்குடிக்கு பிரியும் கிளைப் பாதையில் 2 கி. மீ. சென்றால் இத்திருக்கோயிலை அடையலாம். பேருந்தில் கோயில் வரை செல்லலாம்.

< PREV <
காவிரி தென்கரை 48வது
தலம் திருக்கடவூர்மயானம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 50வது
தலம் திருத்தெளிச்சேரி