திருவேட்களம்

இறைவர் திருப்பெயர்		: பாசுபதேஸ்வரரர், பாசுபதநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: சற்குணாம்பாள், நல்லநாயகி.
தல மரம்			: மூங்கில்.
தீர்த்தம்				: தீர்த்தக்குளம் - கோயிலின் எதிரில் உள்ளது.
வழிபட்டோர்			: நாரதர், அர்ச்சுனன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	அந்தமும் ஆதியு மாகிய 
				  2. அப்பர்   -	நன்று நாடொறும் நம்வினை
Tiruvetkalam temple

தல வரலாறு

  • அர்ச்சுனனுக்குப் பாசுபதம் தந்தருளிய தலம்.

சிறப்புகள்

  • ஞானசம்பந்தபெருமான் சிலநாள் இங்கு தங்கியிருந்து நாடொறும் சென்று தில்லை சபாநாயகரைத் தரிசித்து வந்தார்.

  • சந்நிதி வாயிலின் இருபுறமும் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.

  • பாசுதம் ஏந்திய மூர்த்தியும், அருச்சுனன் திருமேனியும் வரலாற்றுத் தொடர்புடயவை; இவை இரண்டும் மிகப் பழங்காலத்தில் குளத்திலிருந்து கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.

  • முன்பண்டபத் தூண்களில் அரிய சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளன.

  • நாடொறும் ஐந்து கால வழிபாடுகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் செல்லும் சாலையில் உள்ளது. (அண்ணாமலை பல்கலைகழகப் பகுதியைத் கடந்து சென்றால் எளிது)

தொடர்பு :

  • 09842008291, 09843388552

< PREV <
காவிரி வடகரை 1வது
தலம் கோயில் - சிதம்பரம்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 3வது
தலம் திருநெல்வாயில்