|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருவேற்காடு திருக்கோயில் தல புராணம்
Tiruverkkadu Temple sthala puranam
இறைவர் திருப்பெயர் : வேதபுரீஸ்வரர், வேற்காட்டுநாதர்.
இறைவியார் திருப்பெயர் : பாலாம்பிகை, வேற்கண்ணி.
தல மரம் : வேல மரம் (வெளிப் பிராகார்த்தில் உள்ளது)
தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்.
வழிபட்டோர் : வேதங்கள் முதலோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - ஒள்ளி துள்ளக் கதிக்கா.
தல வரலாறு
அகத்திய முனிவருக்கு இறைவன் திருமணக் கோலக் காட்சியை அருளிய அற்புதப் பதி.
முருகப்பெருமான் இத்தலத்திற்கு வந்ததாக தலபுராணம் கூறுகிறது; முருகப் பெருமான் வேலால் உண்டாக்கிய தீர்த்தமே இங்குள்ள வேலாயுத தீர்த்தம் எனப்படுகிறது.
வேதங்கள் வழிபட்டது; நான்கு வேதங்களும் வேலமரங்களாய் நின்று, இறைவனை வழிபட்டதால் இத்தலம் 'வேல்காடு' (வேலமரம்) = வேற்காடு என்று பெயர் பெற்றது.
சிறப்புகள்
திருஞானசம்பந்தர் பெருமானால் பாடல் பெற்றத் திருத்தலம்.
மூர்க்க நாயனார் அவதரித்தத் தலம். இவருக்கு இங்கு சந்நிதி உள்ளது.
அவதாரத் தலம் : திருவேற்காடு.
வழிபாடு : சங்கம வழிபாடு.
முத்தித் தலம் : குடமூக்கு (கும்பகோணம்).
குருபூசை நாள் : கார்த்திகை - மூலம்
விஷம் தீண்டாப்பதி என்ற சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு.
கருவறைச் சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன.
அமைவிடம்
அ/மி. வேதபுரீசுவரர் திருக்கோயில்,
திருவேற்காடு & அஞ்சல் - 600 077.
திருவள்ளூர் மாவட்டம்.
தொலைபேசி : 044 - 26800430.
மாநிலம் : தமிழ் நாடு
காடுவெட்டியாறு என்று சொல்லப்படும் (பழைய) பாலாற்றங்கரையில் கோயில் உள்ளது. சென்னையிலிருந்து திருவேற்காட்டிற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பூந்தமல்லியிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
மூர்க்க நாயனார் வரலாறு (மூலம்)
|