திருவெண்ணெய்நல்லூர்

இறைவர் திருப்பெயர்	: கிருபாபுரீசுவரர், அருட்டுறை நாதர், தடுத்தாட்கொண்டநாதர்
இறைவியார் திருப்பெயர்	: மங்களாம்பிகை, வேற்கண்ணிநாயகி
தல மரம்		: புன்னை
தீர்த்தம்			: பெண்ணையாறு
வழிபட்டோர்		: வேதங்கள், திருமால், வேதன், ஷண்முகன், 
			  விஜயன், சுந்தரமூர்த்தி நாயனார், கம்பர், மெய்கண்டார்.
தேவாரப் பாடல்கள்	: சுந்தரர் - பித்தா பிறைசூடி

தல வரலாறு

  • இறைவியார் வெண்ணெய்யால் கோட்டை அமைத்து வழிபட்டதால் வெண்ணெய் நல்லூர் எனப் பெயர் பெற்றது.

  • சிவபெருமான் சுந்தரரை ஓலை ஆவணம் காட்டி தடுத்தாட்கொண்டருளிய திருவூர்.

  • சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் எழுந்தருளிய தலமும் இது.

  • கல்வெட்டு மூலம் அறியவரும் இறைவர் திருப்பெயர்கள்: திருவெண்ணைநல்லூர்த் திருவருட்டுறை ஆள்வார், திருவெண்ணைநல்லுர் உடையார் ஆட்கொண்டதேவர், தடுத்தாட்கொண்டதேவர்.

சிறப்புகள்

  • இக்கோயிலில் எழுந்தருளியிக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், "ஆளுடைய நம்பி" என்னும் பெயரால் அழைக்கபடுகின்றனர். அவர் நாச்சிமாரோடு எழுந்தருளியிருக்கும் இடம் ஆட்கொண்ட தேவர் தீர்த்தக் குளமான தேவனார் கேணியின் கீழ்க்கரை ஆகும்.

  • இறைவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு "பித்தனென்றே பாடுவாயென" மொழிய அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் 'பித்தாபிறைசூடீ' எனப் பெரிதாந் திருப்பதிகம் பாடினார்.

  • கல்வெட்டுக்கள்: இத்தலத்தில் சோழமன்னர், பாண்டியமன்னர், பல்லவமன்னர், விஜயநகரமன்னர், சாலுவமன்னர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மாவட்டம் : தென்னாற்காடு; வழி - விழுப்புரம் திருச்சிராப்பள்ளி இருப்புப் பாதையில் திருவெண்ணெய்நல்லூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 7-கி. மீ. தொலைவில் உள்ளது.

தொடர்பு :

  • 093456 60711

< PREV <
நடு நாட்டு 13வது
தலம் திருஇடையாறு
Table of Contents > NEXT >
நடு நாட்டு 15வது தலம்
திருத்துறையூர் (திருத்தளூர்)