வெஞ்சமாக்கூடல்
(வெஞ்சமாங்கூடலூர்)

இறைவர் திருப்பெயர்		: கல்யாணவிகிர்தேஸ்வரர், விகிர்தநாதேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை, விகிர்தநாயகி.
தல மரம்			: 
தீர்த்தம்				: குடகனாறு.
வழிபட்டோர்			: 
தேவாரப் பாடல்கள்		: சுந்தரர் - எறிக்குங் கதிர்வே யுதிர்.

Vegnsamakudal temple

தல வரலாறு

  • இத்தலம், வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும்; அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன் கூடுமிடத்தில் (கூடல்) உள்ளதாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது.

  • இத்தலத்திலுள்ள இறைவன் ஒரு சமயம், உமையே ஒரு முதிர்ந்த கிழவியாக வடிவு கொண்டு வீற்றிருக்க, சுந்தரர் பாட்டிற்கு மகிழ்ந்து தன் பிள்ளைகளை அக்கிழவியிடம் ஈடு காட்டிப் பொன் வாங்கிச் சுந்தரருக்கு அளித்தார்; என்ற செய்தியைக் கொங்கு மண்டலச்சதகச் செய்யுள் தெரிவிக்கிறது.

  • கல்வெட்டில் இறைவன் பெயர் 'வெஞ்சமாக்கூடல் விகிர்தர் ' என்றும் இறைவி பெயர் 'பனிமொழியார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்

  • வேடசந்தூர் பக்கத்திலுள்ள அணைக்கட்டு உடைந்து, குடகனாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து இக்கோயில் கருங்கற்கள் 2 கி.மீ தூரம் அடித்துச் செல்லப்பட்டு, ஊரும் அழிந்த நிலை நேர்ந்து பல்லாண்டுகட்கு பிறகு, பல லட்சங்கள் செலவில் இத்திருக்கோயிலை புதியதாக எடுப்பித்து 1986-ல் மகாகும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.

  • நாயன்மார்களின் மூர்த்தங்களின் கீழ் நாடு, மரபு, காலம், திருநட்சத்திரம் முதலிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளன.

  • மூலவர் சந்நிதி வாயில் கதவுகளில் கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழிலும் உள்ள மூர்த்தங்கள் செதுக்கப்பட்டுள்ளது மிகச் சிறப்பாகவுள்ளது.

  • இது திருமுறை தலமற்றுமன்று, திருப்புகழ் தலமுமாகும்.

Vegnsamakudal temple

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கரூர் - அரவக்குறிச்சி சாலையில் சீத்தப்பட்டி (அ) ஆறுரோடு பிரிவில் 8-கி. மீ. செல்லவேண்டும். கரூர் - ஆற்றுமேடு நகரப் பேருந்து (Town Bus) வெஞ்சமாங்கூடல் வழியாக செல்கிறது. தனி ஊர்தியில் செல்வோர் கோயில் வரை செல்லலாம்.

தொடர்பு :

  • 04324 - 262010, 09943527792.

< PREV <
கொங்கு நாட்டு 4வது தலம்
கொடிமாடச்செங்குன்றூர்
(திருச்செங்கோடு)
Table of Contents > NEXT >
கொங்கு நாட்டு 6வது தலம்
திருப்பாண்டிக்கொடுமுடி