|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருவேதிகுடி
இறைவர் திருப்பெயர் : வேதபுரீசுவரர், வாழைமடுநாதர்.
இறைவியார் திருப்பெயர் : மங்கையர்க்கரசி.
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : வேததீர்த்தம்
வழிபட்டோர் : பிரமன். (வேதம்; வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.)
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - நீறுவரி ஆடரவொ டாமைமன.
2. அப்பர் - கையது காலெரி நாகங்.
தல வரலாறு
வேதி - பிரமன். பிரமன் பூசித்த தலமாதலின் வேதிகுடி என்று பெயர் பெற்றது. வேதம் வழிபட்டதாகவும் கூறுவர். ( 'விழுதிகுடி' என்பது மருவி 'வேதிகுடி' ஆயிற்று என்பர் ஒருசாரார்.)
சுவாமி வாழைமடுவில் உற்பத்தியானதால் 'வாழைமடு நாதர் ' என்றும் அழைக்கப்படுகிறார்.
சிறப்புக்கள்
மகாமண்டபத்தில் உள்ள விநாயகர் (தலவிநாயகர்) வேதவிநாயகர் எனப்படுகிறார்.
இறைவன் நான்கு முகங்களாலும் அருளிச் செய்யும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்துக் கேட்கும் நிலையில்; இடக்காலை உயர வைத்து அற்புதமாகக் காட்சித் தருகிறார்.
முதலாம் ஆதித்த சோழன் காலக்கோயிலான இக்கோயிலின் கல்வெட்டில், சுவாமி "வேதிகுடி மகாதேவர் " என்றும், "பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்படுகிறார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சாவூர் - திருவையாறு பேருந்துச் சாலையில் உள்ள தலம். திருக்கண்டியூரிலிருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ளது.
|