திருவாழ்கொளிப்புத்தூர்

இறைவர் திருப்பெயர்	: மாணிக்க வண்ணர், இரத்தினபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: வண்டமர் பூங்குழலி, பிரமகுந்தளாம்பாள்
தல மரம்		: வாகை 
தீர்த்தம்			: பிரம தீர்த்தம்
வழிபட்டோர்		: திருமால், அர்ச்சுனன், துர்க்கை, வண்டு, வாசுகி
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் - 	1. பொடியுடை மார்பினர், 2. சாகை ஆயிரமுடையார்.
			  2. சுந்தரர்   -	தலைக்கலன் தலைமேல்

தல வரலாறு :

  • இறைவன் அர்ச்சுனனை ஆட்கொள்ளவேண்டி, அவன் தன் வாளாயுதத்தை ஒளித்துவைத்திருந்த இடத்தில் வாசுகியை ஏவி, அவ்வாளை ம¨றக்கும்படிச் செய்தார். அர்ச்சுனன், அவ்வாள் வேண்டி இறைவனையும், வாசுகியையும் வழிபட்டு வாளைப்பெற்றான். வாசுகி இருந்த இடம் புற்றாதல¡ல், இது வாளளிபுற்றூர் எனப்படுகிறது.

entrance of the temple

சிறப்புகள்

  • துர்க்கைக்கு வழிபாடு இத் தலத்தில் சிறப்பாகும்.

  • வாசுகிக்கு ஆண்டுதோறும் அபிஷேகம் நடைபெறுகிறது.

அமைவிடம்

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
இது, இன்று திருவாளப்புத்தூர் எனப்படுகிறது. மயிலாடுதுறை - சிதம்பரம் இரயில் பாதையில், நீடூர் இரயில் நிலையத்திற்கு வடக்கே 9-கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை, மணல்மேடு ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 28வது
தலம் குரக்குக்கா
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 30வது
தலம் மண்ணிப்படிக்கரை
(இலுப்பைப்பட்டு)