|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருவல்லம் (திருவலம்)
இறைவர் திருப்பெயர் : வில்வநாதீஸ்வரர், வல்லநாதர்.
இறைவியார் திருப்பெயர் : தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : கௌரி தீர்த்தம்.
வழிபட்டோர் : கௌரி, மஹாவிஷ்ணு, சனகமுனிவர் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- நிவா நதி வடக்கிலிருந்து தெற்காக ஓடிச்சென்று, பாலாற்றில் ஒன்றாகிறது.
- பழைய கல்வெட்டில் இத்தலப் பெயர் 'தீக்காலி வல்லம்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் (சீர்காழிக்குப் பக்கத்தில் 'வல்லம்' என்றொரு ஊர் இருப்பதால்
அதனின் வேறாக இதை அறிவதற்காக) சொல்லப்படுகிறது.
- ஞானசம்பந்தர் பாடலில் 'திருவல்லம்' என்றும்; அருணகிரிநாதரின் திருப்புகழில் 'திருவலம்' என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.
- கௌரி, மஹாவிஷ்ணு, சனக முனிவர் முதலியோர் வழிபட்ட சிவலிங்கங்கள் கோயிலுள் உள்ளன.
- கோயிலுள் நாகலிங்கப் பூக்கள் பூக்கும் நாகலிங்க மரம் உள்ளது; காணத்தக்கது.
- மூன்று நிலைகளையுடைய உள் கோபுரம் கல் மண்டபத்தின் மீது கட்டப்பட்டதாகும்.
- "ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி" - தனிக் கோயிலாக உள்ளது; இதன் எதிரில் நெடுங்காலமாக இருந்து வரும் பலாமரம் ஒன்று உள்ளது.
- இங்கு வழிபட்ட சனக முனிவரின் 'திருவோடு ' சுவாமிக்கு நேரே வெளியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- மூலவர் - சிவலிங்கத் திருமேனி, சுயம்பு; சதுரபீட ஆவுடையார்.
- மூலவர் கருவறை அகழி அமைப்புடையது; கருவறைச் சுவர்களில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.
- கோயிலில் அறுபத்து மூவரின் உற்சவ, மூலத் திருமேனிகள் மேலும் கீழுமாக இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன.
- இடதுபுறம் பள்ளத்தில் 'பாதாளேஸ்வரர் ' சந்நிதி உள்ளது; பஞ்சம் நேரில், இப்பெருமானுக்கு ஒரு மண்டலகாலம் அபிஷேகம் செய்யின் மழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது.
- கஞ்சனுக்கு இறைவன் முத்தி தந்த ஐதீகம், திருவிழாவாக இன்றும் நடைபெறுகிறது; இதற்காக தை மாதம் பொங்கல் கழித்து 10-ம் நாள் சுவாமி இங்கிருந்து புறப்பட்டுக்
காஞ்சனகிரிக்கு எழுந்தருளுகிறார். இம்மலையில் (காஞ்சனகிரியில்) சித்ரா பௌர்ணமியில் குளக்கரையிலிருந்து பார்த்தால் ஜோதியொன்று தோன்றிப் பின் மறைகின்றதாம்.
 |
 |
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காட்பாடிக்கு அண்மையிலுள்ள இருப்புப்பாதை நிலையம். ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை வழியாக காட்பாடி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது.
நகரப் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.
|