வலிவலம்

Valivalam temple
இறைவர் திருப்பெயர்		: இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி.
தல மரம்			: புன்னை.
தீர்த்தம்				: சங்கர தீர்த்தம்.
வழிபட்டோர்			: சூரியன், கரிக்குருவி(வலியன்), 
				  காரணமாமுனிவர் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: மூவர்.

தல வரலாறு

  • வலியன் (கரிக்குருவி) வழிப்பட்டதால் இத்தலம் 'வலிவலம்' என்ற பெயர் பெற்றது.

  • சூரியன், வலியன், காரணமாமுனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.

சிறப்புக்கள்

  • வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலிய இப்பதியின் வேறு பெயர்கள்.
  • இது கோச் செங்கணான் கட்டிய மாடக்கோயில்.
  • தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமை கொள' என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம்.
  • இவ்விறைவனை, இறைவியைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் 'வலிவலமும்மணிக்கோவை' என்னும் நூலொன்று, "தமிழ்தாத்தா" திரு. உ.வே. சாமிநாத ஐயர் அவர்களால் வெளிடப்பட்டுள்ளது.
  • இக்கோயிலில் சோழர் காலத்திய ஒன்பது கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன.

valivalamkoil vimAnam

valivalamkoil vimAnam valivalamkoil pirakAram

valivalamkoil entrance bottom view valivalamkoil pirakAram

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம். திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்; இரண்டுமே நல்ல பாதைகள். திருவாரூரிலிருந்து 10 கி. மீ. தொலைவு.

< PREV <
காவிரி தென்கரை 120வது தலம்
திருக்கன்றாப்பூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 122வது தலம்
திருகைச்சினம்