திருவலிதாயம் ஸ்தலபுராணம் (சென்னை - பாடி)

Thiruvalithayam (Chennai) Temple sthala puranam

இறைவர் திருப்பெயர்		: வல்லீஸ்வரர், வலிதாயநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: ஜகதாம்பாள், தாயம்மை.
தல மரம்			: பாதிரி.
தீர்த்தம்				: பரத்வாஜ தீர்த்தம்.
வழிபட்டோர்			: பரத்வாஜர், இராமர், ஆஞ்சநேயர், 
				 சூரியன், சந்திரன், இந்திரன், 
				 வலியன் (கருங்குருவி) முதலானோர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - பத்தரோடுபல ரும்பொலியம்மலர்.

Tiruvalitayam temple

தல வரலாறு

 • தற்போது சென்னைக்கு அருகில் உள்ள 'பாடி' என்னும் இடமே 'திருவலிதாயம்' என்னும் தலம் ஆகும்.

 • பரத்வாஜர், இராமர், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், வலியன் (கருங்குருவி) முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம்.

 • பரத்வாஜ முனிவர், வலியனாக (கருங்குருவியாக) சாபம் பெற்றார்; அச்சாபம் நீங்க இத்தலத்து வந்து தீர்த்தம் உண்டாக்கி, இறைவனைப் பூசித்துச் சாபம் நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறு.

 • பிரம்மாவுக்கு கமலை, வல்லி என இரு பெண்கள் தோன்றினர் என்றும் அவர்களை விநாயகர் மணந்து கொண்டார் என்றும் வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது.

சிறப்புகள்

 • கஜப்பிருஷ்ட விமான அமைப்புடைய அழகான கோயில்

 • இத்தலத்தில் பௌர்ணமி விசேஷமாக சொல்லப்படுகிறது.

 • திருமுறை தலமட்டுமின்றி, அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலும் உள்ளது.

 • தீர்த்த கிணறில் உள்ள நீர் இளநீரைப்போன்று அருமையான சுவையுடையதாக விளங்குகிறது.

 • பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியிடத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. அதற்குப் பக்கத்தில்தான் விநாயகர் சந்நிதி உள்ளது. அதுபோலவே சுப்பிரமணியர் சந்நிதியும் உரிய இடத்தில் இல்லாமல் சற்று முன்பாகவே அதாவது கருவறையின் நேர் பின்புறத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. சந்நிதியில் சுப்பிரமணியருக்கு முன்னால் சிவலிங்கத் திருமேனி உள்ளது.

 • அறுபத்து மூவர் சந்நிதியில் முழுவதுமில்லை; சில திருமேனிகளே உள்ளன.

 • பரத்வாஜர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.

 • மூலவர் சிவலிங்கத் திருமேனி; கம்பீரமாக காட்சித் தருகிறார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னை ஆவடிச்சாலையில் 'பாடி' உள்ளது. 'டி.வி.எஸ், லூகாஸ்' நிறுத்தத்தில் இறங்கி எதிரில் போகும் சாலையில் சென்றால், ஊர் நடுவே கோயில் உள்ளது.

தொடர்பு :

 • 044 - 26540706

< PREV <
தொண்டை நாட்டு 20வது
தலம் திருவொற்றியூர்
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 22வது தலம்
வடதிருமுல்லைவாயில்