திருவலஞ்சுழி தலபுராணம்
Sthalapuranam of Thiruvalanchuzhi Temple

இறைவர் திருப்பெயர்	: கபர்த்தீஸ்வரர்,  கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர்
இறைவியார் திருப்பெயர்	: பெரிய நாயகி, பிருகந்நாயகி
தல மரம்		: வில்வம்
தீர்த்தம்			: காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்
வழிபட்டோர்		: உமையம்மை, திருமால், இந்திரன், பிரமன், ஆதிசேஷன், 
			  ஏரண்டமுனிவர்
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	1. விண்டெலாமல ரவ்விரை, 
					2. என்னபுண்ணியஞ் செய்தனை, 
					3. பள்ளமதாய படர்சடை. 

			  2. அப்பர்   -	1. ஓதமார் கடலின், 2. அலையார்புனற்கங்கை. 

view of the rAjagOpuram

தல வரலாறு :

  • ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பிலத்தினுள் (பாதாளத்தில்) அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது.

  • அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத் தலத்தில் எழுந்தருளுவித்து, வழிபட்டான்.

second entrance of the temple

சிறப்புக்கள் :

  • திருவிடை மருதூரானது மகாலிங்கத் தலமாக விளங்க, அதற்குரிய பரிவாரத் தலங்களுள் இது, விநாயகர் தலம். இங்குள்ள வெள்ளைப் பிள்ளையார் கோவில் மிகச் சிறப்பானது.மிகவும் வேலைப்பாடுடையது.

  • சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

fine art of architecture

அமைவிடம்

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
இது, கும்பகோணம்-தஞ்சாவூர் இரயில் பாதையில், சுவாமிமலை நிலையத்திலிருந்து வடக்கே 1-கி. மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 24வது
தலம் பழையாறை வடதளி
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 26வது
தலம் குடமூக்கு (கும்பக்கோணம்)