திருவக்கரை திருக்கோயில் ஸ்தல புராணம்

Thiruvakkarai Temple sthala puranam

இறைவர் திருப்பெயர்		: சந்திரசேகரேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை.
தல மரம்			: வில்வம்.
தீர்த்தம்				: சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம். (ஒன்று தூர்ந்துபோயிற்று. 
				  மற்றொன்று சிதிலமாகியுள்ளது)
வழிபட்டோர்			: வக்கிராசுரன்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - கறையணி மாமிடற்றான்.

Tiruvakkarai temple

தல வரலாறு

  • வக்கிரன் வழிபட்ட தலம்; வக்கரை என்று பெயர் பெற்றது. வல் + கரை - வலிய கரையையுடைய இடமாதலின் (கோயிலைச் சுற்றிலும் கற்பாறைகள்) வற்கரை - வக்கரை என்றாயிற்று என்பதும் பொருந்துகின்றது.

  • குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும், அவனையழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றதாகவும் தலபுராணம் கூறுகின்றது.

சிறப்புகள்

  • "வராகநதி " என்றழைக்கப்படும் 'சங்கராபரணி ' ஆற்றின் கரையில் பெரிய ராஜகோபுரத்துடன் கோயில் கம்பீரமாக உள்ளது; மிகப் பழமையான தலம்.

  • மரங்கள் கல்லாக மாறியிருக்கும் விந்தையுடையது, இவ்வூர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் கூடிய அதே தோற்றததோடு இன்று கல்லாக - கல்மரங்களாக மாறிக் காட்சியளிக்கின்றன. நல்ல நீரில் உள்ள 'சிலிகா ' என்னும் கண்ணாடிக்கல் அணுக்கள், அம்மரங்களுள் ஊருருவி, மர அணுக்களை மாற்றிவிட்டு, மரம் முழுவதும் நிறைந்து, மரங்களை உறுதியான கற்களாக மாற்றிவிட்டன என்று அறிவியலார் கூறுகின்றனர். நெய்வேலியில் பூமிக்குக்கீழ் உள்ள உப்பு நீரில் மரங்கள் புதைந்ததால் அம்மரங்கள் கறுப்பாக (நிலக்கரியாக) மாறின என்றும்; இங்கு வெள்ளையாக மாறின என்பதும் அறிவியற் செய்தியாகும். இப்பகுதிக்குப் பக்கத்திலுள்ள, 'செம்மேடு' என்னுமிடத்தில் நிலவியல் துறையினரால் 'முதுமக்கள் தாழி 'யும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  • ராஜகோபுரத்தின் இடப்பக்கம் "வக்கிரகாளி " உள்ளது; இவ்வுருவம் மிக்க அழகுடையதாக உள்ளது. பௌர்ணமியில் அம்பாளுக்கு விசேஷம்.

  • சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த பெரிய 'வக்கிர லிங்கம் ' உள்ளது.

  • சதுர அடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் அழகிய திருமேனி மும்முகத்துடன் விளங்குகின்ற கம்பீரமான தோற்றம்.

  • உள்பிரகாரத்தில் குண்டலி மாமுனிவர் சந்நிதி - முனிவரின் சமாதி மீது சிவலிங்கம் உள்ளது; இதற்கு கோஷ்டமூர்த்தமாகத் தட்சிணாமூர்த்தி, திருமால், வரதராஜப்பெருமாள் உள்ளனர்.

  • அர்த்த மண்டபத்தில் நடராசர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்; தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வரை வந்துள்ளது. புதிய அமைப்புடையது; இதை 'வக்கிர தாண்வம் ' என்று குறிப்பிடுகின்றனர்.

  • நவக்கிரகச் சந்நிதியில் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாக தென்புறம் நோக்கியுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திண்டிவனம் - மயிலம் - வானூர் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் பாதையில் சென்று, 'பெரும்பாக்கம் ' என்னும் இடத்தில் பிரியும் கிளைப் பாதையில் 7-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கோயில் வரை பேருந்தில் செல்லலாம்.

தொடர்பு :

  • 0413 - 2688949

< PREV <
தொண்டை நாட்டு 29வது
தலம் திருஅச்சிறுபாக்கம்
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 31வது
தலம் திருஅரசிலி