திருவைகாவூர் கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்		: வில்வவனேஸ்வரர், வில்வவனநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: சர்வஜனரக்ஷகி, வளைக்கைநாயகி.
தல மரம்			: வில்வம்
தீர்த்தம்				: எமதீர்த்தம், 
வழிபட்டோர்			: 
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - கோழைமிட றாககவி.
Tiruvaikavur temple

தல வரலாறு

  • சிவராத்திரி நாளில் புலிக்குப் பயந்து வில்வ மரத்தின்மேல் ஏறியிருந்த வேடன் இரவெல்லாம் வில்வத்தைப் பறித்துப்போட்ட வண்ணம் தூங்காமல் இருக்க, காலையில் இறைவன் வெளிப்பட்டு அருள்புரிந்த அற்புதத் தலம்.

  • இங்கே நந்தி வாயிலை (கிழக்கு) நோக்கி திரும்பியிருப்பதைக் காணலாம். இத்தல வரலாறாகிய வேடன் நிகழ்ச்சி தொடர்பாக - அதாவது வேடனைப் பிடிக்க எமன்வர, நந்தியும், துவாரபாலகர்களும், ஏனையோரும் தடுக்க, மீறி வருமவனைத் தடுத்து விரட்ட இவ்வாறு திரும்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இக்கோயிலில் துவாரபாலகர்கள், நவக்கிரகங்கள் இல்லை எனப்படுகிறது.

சிறப்புகள்

  • சிவராத்திரிக்கு சிறப்புடைய தலம்.

  • இத்தலத்திற்கு வில்வவனம் என்றும் பெயருண்டு.

  • உள்கோபுர வாயிலில் வேடன் நிகழ்ச்சி சுதையால் சித்தரிக்கப்பட்டுள்ளது.

  • இக்கோயிலில் முருகன் வீற்றிருக்கும் மயிலின் முகம் திசை மாறியுள்ளது.

  • துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன.

  • மூலவர் சுயம்பு மூர்த்தி .

  • இத்தலத்தில் சிவராத்திரியன்று நான்காம் யாமத்தில் வேடன், வேடுவச்சி, இறைவன் காட்சி தரும் ஐதீகம் புறப்பாடு நடைபெறுகின்றன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சுவாமிமலையிலிருந்து 'நாகுகுடி' செல்லும் கிளைப்பாதையில் 'நாகுகுடி' சென்று, அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் பாதையில் சென்று இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாகத் திருவைகாவூருக்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன.

தொடர்பு :

  • 09443586453, 09655261510.

< PREV <
காவிரி வடகரை 47வது
தலம் திருவிசயமங்கை
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 49வது
தலம் வடகுரங்காடுதுறை