வைகல்மாடக்கோயில்

இறைவர் திருப்பெயர்		: சண்பகாரண்யேஸ்வரர், வைகல்நாதர்.
இறைவியார் திருப்பெயர்		: சாகாகோமளவல்லி, கொம்பியல் கோதை, வைகலாம்பிகை
தல மரம்			: சண்பகம் (தற்போதில்லை)
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: இலக்குமி.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர்.
Vaikal Madakkoyil

தல வரலாறு

  • ஊர் - வைகல்; கோயில் - மாடக்கோயில்.

  • இக்கோயிலில் இலக்கு வழிபட்டு பேறு பெற்றாள்.

சிறப்புக்கள்

  • இத்தலத்தில் மூன்று கோயில்கள் உள்ளன:- 1. விசுவநாதர் ஆலயம் - 'வளநகர் ' என்று இப்பகுதி வழங்குகிறது - திருமால் வழிபட்டது, 2. பிரமபு£¦சுவரர் ஆலயம் - தற்போது சிறப்பாக உள்ள கோயில் - பிரமன் வழிபட்டது, 3. வைகல்நாதர் ஆலயம் - இதுவே மாடக்கோயில்; பாடல் பெற்றது.
  • சண்பகாரண்யம், நித்யவாசபுரம் முதலயன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
  • மூலவர் - சுயம்பு மூர்த்தி; அழகான பாணம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - காரைக்கால் செல்லும் பாதையில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சிய நல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் 'நாட்டார் வாய்க்கா 'லைக் கடந்து, பழியஞ்சியநல்லூரை அடைந்து, மேலும் 2 கி. மீ. அதே சாலையில் சென்றால் வைகலை அடையலாம். (நாட்டார் வாய்க்கால் மீது உள்ள காலம் குறுகலானது; ஆதலின் பேருந்து செல்லாது.)

< PREV <
காவிரி தென்கரை 32வது தலம்
திருநீலக்குடி
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 34வது தலம்
திருநல்லம்