|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருவடுகூர் (ஆண்டார்கோயில், திருவாண்டார் கோயில்)
இறைவர் திருப்பெயர் : வடுகீஸ்வரர், வடுகநாதர், வடுகூர்நாதர்.
இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கண்ணி.
தல மரம் : வன்னி.
தீர்த்தம் : வாமதேவ தீர்த்தம்.
வழிபட்டோர் : வடுக பைரவர். (சம்ஹார பைரவர்)
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - சுடுகூ ரெரிமாலை யணிவர்.
தல வரலாறு
வடுகூர் என்ற பெயர் பிற்கால வழக்கில் ஆண்டார்கோயில் என்றாகி இன்று மக்கள் வழக்கில் "திருவாண்டார்கோயில்" என்று வழங்குகிறது.
அஷ்டபைரவர்களுள் ஒருவராகிய வடுக பைரவர், முண்டகன் என்னும் அசுரனைக் கொன்ற பழிதீர வழிபட்ட தலமாதலின்; வடுகர் வழிபட்டது வடுகூர் என்று பெயர் பெற்றது.
ஆண்டவனார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர்; கோயிற் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப் பெயராயிற்று - ஆண்டார் கோயில். 'திரு' என்னும் அடைமொழி சேர்ந்து 'திருஆண்டார் கோயில்' என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில் என்றாயிற்று.
சிறப்புக்கள்
- இக்கோயில் சோழர்காலக் கலைப் பாணியில் அமைந்துள்ளது.
- சுவாமி விமானம் தஞ்சைக் கோயிலமைப்பில் உள்ளது.
- கோயில் தொல் பொருள் ஆய்வுத் துறையினரால் புதுப்பிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
அமைவிடம்
மாநிலம் : புதுச்சேரி
விழுப்புரம் - பாண்டிச்சேரி (வழி - கோலியனூர், கண்டமங்கலம்) பேருந்துச் சாலையில் சென்று, கோலியனூர், வளவனூர் தாண்டி, புதுவை மாநில எல்லைக்குள் நுழைந்து சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலுள்ள இக்கோயிலை அடையலாம்.
|