வடகுரங்காடுதுறை (ஆடுதுறைபெருமாள்கோயில்) கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்		: தயாநிதீஸ்வரர், குலைவணங்கீசர், வாலிநாதர், சிட்டிலிங்கநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: ஜடாமகுடேஸ்வரி, அழகுசடை முடியம்மை.
தல மரம்			: தென்னை.
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: வாலி
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - கோங்கமே குரவமே.
Vada Kurangaduturai temple

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் ஆடுதுறை பெருமாள் கோயில் என்று வழங்குகிறது.

  • கர்ப்பிணி ஒருத்தியின் தாகத்தைத் தீர்க்கத் தென்னங்குலையை இறைவன் வளைத்துக் கொடுத்ததால் குலைவணங்கீஸ்வரர் என்றும், சிட்டுக்குருவி வழிபட்டதால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் இறைவன் வழங்கப்படுகிறார்.

சிறப்புகள்

  • இத்தலத்தில் நடராசப் பெருமான் சிவகாமியுடன் மூலவராகக் காட்சியளிக்கின்றார்.

  • இத்தலத்து தல வரலாறான (கர்ப்பிணி) செட்டிப் பெண்ணின் உருவம் உள்ளது.

vimAnam

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - திருவையாறு, சாலையில் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் தாண்டி, உள்ளிக்கடை என்னும் ஊரையடுத்து இத்தலம் - ஆடுதுறை உள்ளது. (ஆடுதுறை என்ற பெயரில் மற்றொரு தலம் இருப்பதாலும், இத்தலத்திற்குப் பக்கத்தில் பெருமாள் கோயில் என்னும் வைணவத் தலம் இருப்பதாலும் இத்தலம் 'அந்த' ஆடுதுறையினின்றும் வேறுபட்டறிய "ஆடுதுறை பெருமாள் கோயில்" என்று வழங்குகிறது. குரங்காடுதுறை என்று கேட்டால் யாருக்கும் தெரிவதில்லை.) இத்தலம் குடந்தையிலிருந்து 20 கி. மீ. தொலைவிலும், திரவையாற்றிலிருந்து 5 கி. மீ. தொலைவிலும் உள்ளது.

தொடர்பு :

  • 04374 - 240491, 244191.

< PREV <
காவிரி வடகரை 48வது
தலம் திருவைகவூர்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 50வது
தலம் திருபழனம்