திருவூறல் (தக்கோலம்) கோயில் தலவரலாறு

The history of sacred temple of Thiruvural (Thakkolam)

	இறைவர் திருப்பெயர்	: ஜலநாதேஸ்வரர், உமாபதீசர்.
	இறைவியார் திருப்பெயர்	: கிரிராஜ கன்னிகை, மோகனவல்லி.
	தல மரம்		: 
	தீர்த்தம்			: நந்தி தீர்த்தம்.
	வழிபட்டோர்		: 
	தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - மாறில் அவுணரரணம்.

Tiruooral temple

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் தக்கோலம் என்று வழங்கப்படுகிறது.

  • தக்கன் தலையைக் கொய்த தலம் என்பர். தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு ஓலமிட்டதால் 'தக்கன் - ஓலம் ' மருவி 'தக்கோலாம் ' என்றாயிற்று என்று உள்ளூர்ச் செய்தி அறிவிக்கின்றது. (இதற்கு அரண்போல் தேரடிக்கு அருகில் வீரபத்திரர் கோயில் உள்ளது.)

சிறப்புகள்

  • கோபுரத்தில் பலவகைச் சிற்பங்கள் உள்ளன; அவற்றுள் மார்க்கண்டேயருக்காக இறைவன் எமனை உதைத்தருளும் காட்சி காணத்தக்கது.

  • மூலவர் - சிவலிங்கத் திருமேனி; பிருதிவி (மணல்) லிங்கம்; தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம்; பழமையான மூர்த்தி.

  • கோஷ்ட மூர்த்தங்களில் - தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குற்றுக்காலிட்டு அபூர்வ காட்சி தருகின்றார்.

  • சித்தாந்த சரபம் அஷ்டாவதானம் பூவை கல்யாண சுந்தர முதலியார் இத்தலத்திற்கு தலபுராணம் பாடியுள்ளார்.

  • (அருகில் ஓடும் கல்லாற்றின் கரையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் (கங்காதரேஸ்வரர்) கோயில் மிகவும் பழுதடைந்த நிலையில் பூஜைகளின்றி உள்ளது. இதன் மேற்கில் உள்ளது சத்திய கங்கை தீர்த்தம். கிழக்கில் உள்ள நந்தி வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்துகொண்டிருந்தது; தற்போது இல்லை. நந்தி வாயிலிருந்து விழும் நீர், சிவலிங்கத்தைச் சுற்றிச் சென்று வெளியில் வந்து, மீண்டும் மற்றொரு நந்தி வாயிலிருந்து விழுந்து, குளத்தில் நிரம்பி பின்னர் ஆற்றில் ஓடும் அமைப்பில் இது அமைந்துள்ளது.)

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னையிலிருந்தும் காஞ்சிபுரத்திலிருந்தும் நேரடி பேருந்து வசதி உள்ளது. காஞ்சியிலிருந்து 30-கி. மீ. தொலைவு; இருப்புப் பாதை நிலையம்.

தொடர்பு :

  • 04177 - 246427

< PREV <
தொண்டை நாட்டு 11வது
தலம் திருமாற்பேறு
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 13வது தலம்
திருஇலம்பையங்கோட்டூர்