|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருத்துருத்தி
Sthala puranam of Thiruthuruthi Temple
இறைவர் திருப்பெயர் : உத்தரவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார், கற்றளி மகாதேவர்
இறைவியார் திருப்பெயர் : மிருதுமுகிழாம்பிகை, பரிமள சுகந்த நாயகி,
அரும்பன்ன வனமுலையாள்
தல மரம் : குத்தால மரம் (ஒருவகை ஆத்தி மரம்)
தீர்த்தம் : காவிரி தீர்த்தம், சுந்தர தீர்த்தம், பத்மதீர்த்தம், வடகுளம்
வழிபட்டோர் : உமாதேவியார், வருணண், காளி, அக்னி, சப்த ரிஷிகள்
(காசிபர், ஆங்கிரசர், கௌதமர், மார்க்கண்டேயர், வசிஷ்டர்,
புலஸ்தியர், அகஸ்தியர்)
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. வரைத்தலைப் பசும்,
2. ஓங்கிமேல் உழிதரும்.
2. அப்பர் - 1. பொருத்திய குரம்பை தன்னை.
3. சுந்தரர் - 1. மின்னுமா மேகங்கள்,
2. மூப்பதும் இல்லை பிறப்பதும்
4. ஐயடிகள் காடவர்கோன் - வஞ்சியன நுண்ணிடையார் (5-வது பாடல்)
தல வரலாறு
- தல மரத்தின் பெயரால், இது வழங்கப்படுகிறது.
- சுந்தரரின் உடற் பிணி நீங்கியத் தலம் .
சிறப்புகள்
- இத் தலம், தருமை ஆதீன அருளாட்சியில் உள்ளது.
- சோழர்,விஜய நகரத்தார் கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இஃது, மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் குத்தாலம் நிலையத்திலிருந்து 1-கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை, கும்பக்கோணம் இடங்கலிருந்து பஸ் வசதி உள்ளது. குத்தாலம் என வழங்கப்படுகின்றது.
|