திருத்துறையூர் (திருத்தளூர்) கோயில் தலவரலாறு
Sthala puranam of Thiruthuraiyur (Thiruthalur) Temple


	இறைவர் திருப்பெயர்	: சிஷ்டகுருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர்.
	இறைவியார் திருப்பெயர்	: சிவலோகநாயகி, பூங்கோதைநாயகி.
	தல மரம்		: கொன்றை.
	தீர்த்தம்			: சூரிய தீர்த்தம்.
	வழிபட்டோர்		: நாரதர், வசிட்டர், அகத்தியர், வீமன், சூரியன் ஆகியோர்.
	தேவாரப் பாடல்கள்	: சுந்தரர் - மலையார் அருவித் திரள்.
Turaiyur temple

தல வரலாறு

 • மக்கள் வழக்கில் திருத்தளூர் என்று வழங்குகிறது.

 • சுந்தரர் காலத்தில் ஊரில் தென்பால் ஓடிய பெண்ணையாறு; இன்று வடபால் ஓடுகிறது. (பழைய பெண்ணையாறு, மலட்டாறு என்னும் பெயரில் தென்பால் உள்ளது.)

 • இத்தலத்திற்கு வந்த சுந்தரரை, இறைவன் கிழவடிவில் தோன்றி ஆட்கொண்ட இடம் துறையூருக்கு அண்மையில் உள்ள 'கிழப்பாக்கம்' என்பதாகும். அவ்விடத்தில் சிவலிங்கமும் கோயிலும் உள்ளன. இவ்வாறு ஆட்கொண்ட திருமேனியே பசுபதீஸ்வரர் - பூங்கோதை நாயகி எனப்படுகிறது.

 • இறைவன் முதியவராக சுந்தரரை ஆட்கொண்ட இடத்திலிருந்து சுந்தரர் கோயிலைப் பார்த்துத் தரிசிக்க, அப்போது இறைவன் கோயில் விமானத்திலிருந்து ரிஷபாரூடராய்க் காட்சி தந்ததாகவும் சொல்லப்படுகிறது. (இதற்கேற்ப இருந்த கோயில் அமைப்பு பிற்காலத்தில் திருப்பணி செய்தோரால் மாற்றப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.)

சிறப்புகள்

 • சுந்தரர் தவநெறி வேண்டிப்பெற்ற தலம்.

 • 'சிவஞானசித்தியார் ' என்னும் சாத்திர நூலைப் பாடிய அருணந்தி சிவாசாரியார் (சகலாகம பண்டிதர்) அவதரித்து வாழ்ந்த தலம். (இவரது சமாதிக் கோயில் உள்ளது.)

 • இப்பதி பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ளது; மேற்கு நோக்கிய சந்நிதி.

 • அருணகிரிநாதரின் திருப்புகழும், வண்ணச் சரபம் தண்டபாணிசுவாமிகள் பாடல்களும் இத்தலத்திற்கு உள்ளது.

 • இங்கு சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் வடக்கு நோக்கியும் இருப்பது நினைந்து தொழத்தக்கது.

 • ரிஷபாரூடர் தவநெறி தந்த காட்சியும், சுந்தரர் கைகூப்பி வணங்கும் நிலையும் காணலாம்.

 • நால்வர் மண்டபத்தின் தூண் ஒன்றில் - இத்தலத்திற்கு சுந்தரர் பெண்ணையாற்றை ஓடத்தில் கடந்து வந்ததாகச் சொல்லப்படும் ஐதீகம் சிற்பமாக உள்ளது.

 • தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் உமாமகேஸ்வரர் சுந்தரருக்கு தவநெறி தந்த காட்சி, சாட்சி விநாயகருடன் கல்லில் சிற்பமாக உள்ளது.

 • அம்பாள் சந்நிதிக்குப் எதிரில் உள்ள தலமரத்திற்குப் பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.

 • கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயர் "ராஜராஜ வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருத்துறையூர் " என்றும்; இறைவன் பெயர் "தவநெறி ஆளுடையார்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
பண்ருட்டி - புதுப்பேட்டை வழியாக அரசூர் செல்லும் சாலையில் 10-கி. மீ. சென்று "கரும்பூர்" சாலையில் திரும்பி 5-கி. மீ. சென்று இத்தலத்தையடையலாம். பண்ருட்டியிலிருந்து பேருந்து வசதி உள்ளது. இத்தலம் விழுப்புரம் - கடலூர் புகைவண்டி மார்க்கத்தில் உள்ள புகைவண்டி நிலையமுமாகும்.

தொடர்பு :

 • 04142 - 248498, 09444807393.

< PREV <
நடு நாட்டு 14வது தலம்
திருவெண்ணைநல்லூர்
Table of Contents > NEXT >
நடு நாட்டு 16வது தலம்
திருவடுகூர் (ஆண்டார்கோயில்,
திருவாண்டார் கோயில்)