திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)

இறைவர் திருப்பெயர்		: சிவக்கொழுந்தீசர், சிவாகங்கரேஸ்வரர், திருந்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: நீலாயதாக்ஷி, ஒப்பிலாநாயகி, கருந்தடங்கண்ணி, 
				  இளங்கொம்பன்னாள்.
தல மரம்			: கொன்றை.
தீர்த்தம்				: ஜாம்பவ தீர்த்தம்.
வழிபட்டோர்			: வீரசேன மன்னன்.
தேவாரப் பாடல்கள்		: சுந்தரர் - நீறு தாங்கிய திருநுத.

Tiruthinainagar temple

தல வரலாறு

  • பெரியான் என்னும் பள்ளன் தன்நிலத்தை உழுதுகொண்டிருக்கும்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க, அவன் தன் தொழிலை நிறுத்திவிட்டு, உணவு கொண்டு வரத் தன் வீடு சென்றான். அவன் திரும்பி வருவதற்குள் இறைவன் அந்நிலத்தில் தினை விளைந்திருக்குமாறு செய்தார். வந்த பெரியான் கண்டு திகைக்க இறைவன் அவனுக்குக் காட்சி தந்தார். அதிசயமாக தினை விளைந்ததால் இத்தலம் 'தினைநகர் ' என்று பெயர் பெற்றது.

  • வீரசேன மன்னனுக்கு இத்தீர்த்தத்தில் மூழ்கி, வெண்குஷ்டம் தீர்ந்தமையால் அவனே இக்கோயிலைக் கட்டினான் என்பது வரலாறு.

Tiruthinainagar temple

சிறப்புகள்

  • நடராச சபையில் நடராசர் அழகான சிரித்த முகம். நடராச மூர்த்தியின் கீழே பீடத்தில் மகாவிஷ்ணு சங்கை வாயில் வைத்து ஊதுவதுபோலவும், பிரம்மா பஞ்சமுக வாத்யம் வாசிப்பது போலவும் சிறிய மூர்த்தங்கள் உள்ளன.

  • மூலவருக்கு இடப்புறம், சுயம்புத் திருமேனி; பாணம் சற்று கூர்மையாகவுள்ளது. சதுரபீட ஆவுடையார் - இருபுறமும் வழித்தெடுதாற் போலவுள்ளது.

  • கோயில் சுவரில் தல வரலாற்றுச் சிற்பங்கள் உள.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
(தனிப் பேருந்தில் செல்வோர்) கடலூர் - சிதம்பரம் பிரதான பாதையில் சிதம்பரத்திலிருந்து 45-ஆவது கி. மீ.ல் ஆலப்பாக்கம் - புதுச்சத்திரம் இவற்றிற்கு இடையில் மேட்டுப்பாளையம் என்னும் இடத்தில் தீர்த்தனகிரி என்று கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் 5-கி. மீ. சென்று; தானூர் என்று பெயர்ப் பலகையுள்ள சாலையில் சென்று, தானூரையடைந்து, தெருக்கோடியில் இடப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் சென்று இவ்வூரையடையலாம்.

தொடர்பு :

  • 09443434024

< PREV <
நடு நாட்டு 4வது தலம்
திருஎருக்கத்தம்புலியூர்
(இராசேந்திரப்பட்டிணம்)
Table of Contents > NEXT >
நடு நாட்டு 6வது தலம்
திருச்சோபுரம் (தியாகவல்லி)