திருக்கோடி
(குழகர்கோயில் / கோடியக்கரை / கோடிக்கரை)

இறைவர் திருப்பெயர்	: அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்	: அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி.
தல மரம்		: குராமரம்.
தீர்த்தம்			: அக்கினி (கடல்) தீர்த்தம், அமுத தீர்த்தம்.
வழிபட்டோர்		: இந்திரன், சுவேதமுனிவரின் மகன் பிரமன், 
			  நாரதர், குழகமுனிவர், சித்தர்கள்.  
தேவாரப் பாடல்கள்	: சுந்தரர் - கடிதாய்க் கடற்காற்று (7-32).

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.




தல வரலாறு

  • திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதக் கலசத்தை வாயு பகவான், தேவருலகிற்கு எடுத்துச் சென்றபோது அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்கமாக ஆயிற்று என்று தலவரலாறு கூறுகிறது.

சிறப்புகள்

  • குழகர் கோயில் உள்ள இடம் கோடியக்காடு, கடல் உள்ள இடம் கோடியக்கரை என்று சொல்லப்படுகிறது.

  • சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வந்த சுந்தரர், கோயில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்தி பாடியதாக வரலாறு சொல்லப்படுகிறது.

  • தக்ஷிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் தல தீர்த்தமாகிய கடலில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

  • இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும்.

  • இத்தலத்து முருகப்பெருமான் ஓர் முகமும், ஆறு கரங்களும், ஏனைய ஆயுதங்களுடன் ஒரு திருக்கரத்தில் அமுத கலசமும் ஏந்தியிருக்கிறார். அமுத கலசம் ஏந்தியிருப்பது தலப்புராணம் தொடர்புடையதாக இருக்கலாம். இத்தலத்து விநாயகரும் "அமிர்த விநாயகராவார்".

  • கடற்கரையிலுள்ள சித்தர் கோயிலில் சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக நம்பப்படுகிறது.

  • நவகிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன; இத்தலம் கோளிலி தலம் எனப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இத்தலத்திற்கு (கோடிக்கரை) வேதாரண்யத்திலிருந்து பேருந்துகள் நிறைய உள்ளன.

< PREV <
காவிரி தென்கரை 126வது
தலம் திருஅகத்தியான்பள்ளி
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 128வது
தலம் திருவிடைவாய்