|
Home > Temples of India > pADal peRRa sthalam
தண்டலை நீள்நெறி (தண்டலைச்சேரி, தண்டலச்சேரி)
இறைவர் திருப்பெயர் : ஸ்திரபுத்தீஸ்வரர், நீற்நெறி நாதர்.
இறைவியார் திருப்பெயர் : ஞானாம்பிகை.
தல மரம் : குருந்தை
தீர்த்தம் : ஓமக தீர்த்தம் (ஞானசித்தி விநாயகர் கோயிலின் எதிரில் நீராடல் சிறப்புடையது.)
வழிபட்டோர் : வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- அரிவாட்டாய நாயனார் முக்தி பெற்ற தலம். இந்நாயனார் பிறந்த ஊரான 'கணமங்கலம்' பக்கத்தில் உள்ளது. இதை மக்கள் 'கணமங்கலத்திடல்' என்றும், 'கண்ணந்தங்குடி'
என்றும் வழங்குகின்றனர். இதுவே கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்; இக்கோயில் அழிந்து விடுவே, பிற்காலத்தில் தேவகோட்டை ராம. அருஅரு. இராமநாதன் செட்டியார்
அவர்கள் இப்போதுள்ள கற்கோயிலைக் கட்டித் தந்துள்ளார்கள்.
- கோயில் கற்றளி; விமானங்கள் சுதை வேலைபாடுடையவை.
- இக்கோயிலில் வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் பூசித்த சிவலிங்கங்கள் உள்ளன.
- விநாயகரை வணங்கி உட்செல்லும்போது, மேற்புறத்தில் இருமருங்கும் அரிவாட்டாய நாயனார் - அவர் மனைவி அரிசியும் மாவடுவும் கொட்டுவது இறைவனின் திருக்கரம் வெளிப்பட்டு
நாயனாரைத் தடுப்பது, நாயனாருக்கும் அவர்தம் மனைவியாருக்கும் இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தருவது முதலியவை சிற்பங்களாக கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.
- அரிவாட்டாய நாயனார் குருபூசை அறுப்புத் திருவிழாவாகப் பெருவிழாவில் உரியமுறைப்படி நடத்தப்பெறுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருத்துறைப்பூண்டியிலிருந்து 3 கி. மீ. தொலைவு. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பேருந்து வழியில் வருவோர் கோயில் வாயிலில்
இறங்கலாம். இத்தலத்திற்கு பக்கத்தில் 'மணலி ' புகைவண்டி நிலையம் உள்ளது.
|