தலையாலங்காடு கோயில் தலவரலாறு
Sthala puranam of Thalaiyalangadu Temple


இறைவர் திருப்பெயர்		: நடனேஸ்வரர், ஆடவல்லநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: பாலாம்பிகை.
தல மரம்			: பலா.
தீர்த்தம்				: சங்கு தீர்த்தம்.
வழிபட்டோர்			: கபில முனிவர்.
தேவாரப் பாடல்கள்		: அப்பர் - தொண்டர்க்குத் தூநெறியாய்.

தல வரலாறு

  • சங்க காலத்தில் இவ்வூர் தலையாலங்கானம் என்னும் பெயரில் விளங்கியது. (தலையாலங்கானப் போரும், தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் பெயரும் அனைவரும் அறிந்ததே.)

  • முயலகனை அடக்கி அவன் முதுகை நெரித்து இறைவன் நடனமாடிய தலம்.

  • சரஸ்வதி தேவிக்கு இறைவர் சோதிர்லிங்கமாகக் காட்சி வழங்கி அருள்பாளித்த திருத்தலம்.

Sri Nataneswarar temple, Thalaiyalangadu.

சிறப்புகள்

  • கோயிலின் முன்புள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனுக்குத் தீபமிட்டு உறுதியுடன் வழிபட்டால் வெண்குஷ்ட நோய் நீங்கப்பெறும் என்பது இன்றும் மக்களின் அசையாத நம்பிகையாக உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - கும்பகோணம் பேருந்துச் சாலையில் (18-கி.மீ.) தலையாலங்காடு அடைந்து (இரண்டு வாய்க்கால்களை கடந்து சென்றால்) கோயிலை அடையலாம்.

< PREV <
காவிரி தென்கரை 92வது
தலம் திருப்பெருவேளூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 94வது
தலம் திருக்குடவாயில்