பூவனூர்

இறைவர் திருப்பெயர்		: புஷ்பவனநாதர், சதுரங்க வல்லபநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி.
தல மரம்			: பலா.
தீர்த்தம்				: க்ஷீரபுஷ்கரணி, கிருஷ்ணகுஷ்டஹர தீர்த்தம்.
வழிபட்டோர்			: சுகப்பிரம்மரிஷி.
தேவாரப் பாடல்கள்		: அப்பர் - பூவ னூர்ப்புனி தன்றிரு.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.




gOpuram

தல வரலாறு

  • வசுசேன மன்னனுக்கு மகளாகப் பிறந்து சதுரங்க ஆட்டத்தில் சிறந்து விளங்கிய அம்பாளை, சதுரங்கத்தில் வென்று, மணந்து கொண்டதால் இறைவன் சதுரங்கவல்லப நாதர் என்னும் திருநாமம் பெற்றார்.

சிறப்புகள்

  • சுகப்பிரம்மரிஷி மலர்வனம் வைத்து வழிபட்ட தலம்.

  • இங்குள்ள தீர்த்தங்களில் கோயிலின் பின்புறம் உள்ள 'கிருஷ்ண குஷ்டஹரம்' தீர்த்தம், கருங்குஷ்டம் போக்கும் தன்மையுடையது. ஆனபோதிலும் இவ்விரண்டும் பிணி தீர்க்கும் குளங்களாக உள்ளன.

  • இத்தலத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. விஷம் தோஷம் நீக்கவல்ல பிரத்யட்ச பிரார்த்தனைச் சந்நிதி, விஷக்கடிக்கு, எலிக்கடிக்கு இங்குத்தரப்படும் வேரைக்கட்டிக் கொண்டு இவ்வம்பிகையை வழிபட்டு மக்கள் குணமடைகின்றனர்.

  • இறைவனுக்கு நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.

pUvanUr temple with pond




அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர், நீடாமங்கலம் - மன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறிப் பூவனூர் நிறுத்தத்தில் இறங்கி, பாமணி ஆற்றுப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றால் கோயிலையடையலாம். மன்னார்குடி - அம்மாப்பேட்டை; வலங்கைமான் - மன்னார்குடி நகரப் பேருந்துகள் பூவனூர் வழியாகச் செல்கின்றன.

< PREV <
காவிரி தென்கரை 102வது
தலம் திருவெண்ணியூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 104வது
தலம் திருப்பாதாளேச்சுரம்