திருப்பூவனம்

இறைவர் திருப்பெயர்		: புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: சௌந்தரநாயகி, மின்னனையாள்.
தல மரம்			: பலா.
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	1. அறையார்புனலு மாமலரும், 
						2. மாதமர் மேனிய னாகி.

				  2. அப்பர்   -	1. வடிவேறு திரிசூலந் தோன்றுந்.

				  3. சுந்தரர்  -	1. திருவுடை யார்திரு மாலய
Tiruppuvanam temple

தல வரலாறு

  • மூவர் பெருமக்களுக்கும் வைகை மணல் சிவலிங்கமாகத் தோன்றியமையால் மூவரும் மறுகரையிலிருந்தே-இத்தலத்தை மிதிக்க அஞ்சி-வணங்க, இறைவன்அவர்கள் தம்மை நேரே கண்டு வணங்குவதற்கு ஏதுவாக நந்தியை விலகச் செய்தருளினார். இதனால் நந்தி சாய்ந்துள்ளதை காணலாம்.

  • பொன்னனையாள் என்னும் ஒருத்திக்காக இறைவன் சித்தராக வந்து இரசவாதம் செய்து பொன் கொடுக்க, அவள் இதனால் சிவலிங்கம் அமைத்து வழிபட, அது மிகவும் அழகாயிருப்பதைக் கண்டு ஆசையுடன் அச்சிவலிங்கத் திருமேனியை கிள்ளி முத்தமிட்டாளாம். கிள்ளி அடையாளம் சிவலிங்கத்தில் இன்றும் காணலாம்.

சிறப்புக்கள்

  • புஷ்பவனகாசி, பிதுர்மோக்ஷபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் என்பன வேறு பெயர்கள்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் மதுரை - மானாமதுரை இருப்பு பாதையில் உள்ளது. பேருந்துகளும் நிறைய உள்ளன. இவ்வூர் நான்கு பகுதிகளில் 'கோட்டை' பகுதியில் கோயில் உள்ளது.

< PREV <
பாண்டி நாட்டு 10வது
தலம் திருக்கானப்பேர்
Table of Contents > NEXT >
பாண்டி நாட்டு 12வது
தலம் திருச்சுழியல்