திருப்புத்தூர்

இறைவர் திருப்பெயர்		: ஸ்ரீ தளீஸ்வரர், ஸ்ரீ தளிநாதர், தருத்தளிநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: சிவகாமி.
தல மரம்			: சரக்கொன்றை.
தீர்த்தம்				: ஸ்ரீ தளி (திருத்தளி தீர்த்தம்) சிவகங்கை.
வழிபட்டோர்			: இந்திரன் மகன் சயந்தன்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	வெங்கள் விம்மு வெறியார். 
				  2. அப்பர்   -	புரிந்தமரர் தொழுதேத்தும்.
Tirupputtur temple

தல வரலாறு

  • பெருமான் ஆடிய கௌரி தாண்டவத்தை கண்டு இலக்குமி வழிபட்டு பேற்றைப் பெற்றாள்.

  • அர்த்தசாம வழிபாட்டிற்காகக் குருக்கள் மணியடித்து விட்டால் அதற்குப் பிறகு, (குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் தவிர) யாரும் பைரவர் சந்நிதிக்கு செல்லக்கூடாது என்பது தொன்று தொட்டு இருந்துவரும் ஐதீகம்.

சிறப்புக்கள்

  • கோயிலுக்குள் திருப்புத்தூர் தமிழ்ச் சங்கம் நடைபெறுகின்ற மண்டபம் உள்ளது.

  • மதிலையொட்டி நந்தவனப் பகுதிகள்; கொன்றை மரங்கள் உள்ளன.

  • உள்பிரகார வாயிலில் சம்பந்தர், அப்பர் பாடல்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.

  • தனிக்கோயிலாக அழகிய விமானத்துடன் அமைந்துள்ள பைரவர் சந்நிதியில் பைரவர் யோகாசன நிலையில் அமர்ந்துள்ளார்.

  • பைரவருக்கு நாடொறும் அர்த்தசாமத்தில் புனுகு சார்த்தப்பட்டு வடைமாலை, சம்பாநைவேத்தியம் நிவேதிக்கப்படுகிறது.

  • நடராசசபையில் சிற்பவேலைபாடமைந்த ஐந்து கற்றூண்களும் இசைத்தூண்களாக அமைந்துள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மதுரைக்கும் காரைக்குடிக்கும் மத்தியில் உள்ளது. மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. (வடாற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வேறு).

< PREV <
பாண்டி நாட்டு 5வது தலம்
திருக்கொடுங்குன்றம்
Table of Contents > NEXT >
பாண்டி நாட்டு 7வது
தலம் திருப்புனவாயில்