|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருப்புறவார்பனங்காட்டூர்
இறைவர் திருப்பெயர் : பனங்காட்டீசர்
இறைவியார் திருப்பெயர் : புறவம்மை, சத்யாம்பிகை
தல மரம் : பனை
தீர்த்தம் : பத்ம தீர்த்தம்
வழிபட்டோர் : சூரியன், சிபிச்சக்கரவர்த்தி
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - விண்ணமர்ந்தன மும்மதில்.
தல வரலாறு
இது, பனை மரத்தைத் தலமரமாகக் கொண்டதாலும், சிபிச் சக்கரவர்த்தி (புறாவின் பொருட்டு தன் தசையை அரிந்தவர்) வழிபட்டதாலும்(புறவார்), இப் பெயர் பெற்றது.
- சூரியன், பூசித்துப் பேறுபெற்றத் தலம்.
சிறப்புக்கள்
சித்திரை மாதம்,முதல் ஏழு நாட்களில், சூரியனுடைய கிரணங்கள் சுவாமியின் மீதும், அம்பிகையின் மீதும் பதிகின்றது.
சோழர் காலக் கல்வெட்டுகள் மூன்று படி எடுக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, விழுப்புரம் இரயில் நிலையத்திற்கு வடக்கேயுள்ள முண்டியம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 2-கி. மீ. தூரத்தில் உள்ளது. விழுப்புரம் - பாண்டிச்சேரி (திருக்கனூர் - வழி) செல்லும் பஸ்களில் இக்கோவிலை அடையலாம். பனையபுரம் என வழங்கப்படுகின்றது.
|